கரண்ட் பில்லை குறைக்க நூதன முறையில் மோசடி!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, நிலக்கரி கையிருப்பும் மிகக்குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் தான் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருபோன்று மின்வெட்டு பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, மின்சாரத்தை குறைவாகக் காட்டி மோசடி செய்ததாக தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் … Read more

எரிபொருள் நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகம் இல்லை

எரிபொருள் நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை பெற்றோலிய சேமிப்பகம் அறிவித்துள்ளது.  இதேவேளை டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.  தொடருந்து டீசல் கிடைக்காவிடின் நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பேருந்துகளும் … Read more

சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட மர்ம நபர்… 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியுயார்க் நகர சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். Buffalo பகுதியில் உள்ள supermarket உள்ளே துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த அப்பாவி மக்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். அவன் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த காவல்துறையினர் குற்றவாளி ராணுவ சீருடை அணிந்திருந்ததாகத் தெரிவித்தனர். Source link

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ஆம் தேதி தமிழகம் வருகை..!

இம்மாத இறுதியில் தமிழகம் வருகிறார் பிரதமர் வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை சென்னை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதி வாரத்தில், தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார் சென்னையில் நடைபெறும் விழாவில், மத்திய அரசின் முடிவுற்ற திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார் Source link

யார்க்கரை தெறிக்கவிட்டு LBW செய்த நடராஜன்! வெளியே போகமாட்டேன் என அடம்பிடித்த பேட்ஸ்மேன்.. வைரல் வீடியோ

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வீரரை தனது அபார யார்க்கர் பந்தின் மூலம் நடராஜன் எல்பிடபுள்யூ ஆக்கிய நிலையில் DRS பெயரில் சில நிமிடங்கள் மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய நிலையில் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் பேட்டி ஆடினார். 5 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த … Read more

கேரள தக்காளி காய்ச்சலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை : அமைச்சர் தகவல்

திருவாரூர் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தற்போது கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார். நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.  அப்போது அவர் திருவாரூர் மாவ்பட்டம் கோட்டூர் ஆரம்பச் சுகாதார நிலைய வளாகத்தில் கட்டுப்பட்டுள்ள புதிய கட்டிடங்களைப் பார்வையிட்டார்.  பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர், “தமிழக நிதிநிலை அறிக்கையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 136 … Read more

இந்தியாவில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி:     கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மேலும் 13 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,214 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே … Read more

புத்தர் ஜெயந்தி தினத்தையொட்டி பிரதமர் மோடி நாளை நேபாளம் செல்கிறார்

புதுடெல்லி: புத்தர் ஜெயந்தி தினம் புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை (16ந்தேதி) நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புத்த ஜெயந்தி தினவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவையும் சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி இந்திய நேபாள எல்லையில் உத்தரபிரதேச மாநில போலீசாரும் சசஸ்திர … Read more

புதிய திட்டத்திற்காக உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது. அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் … Read more

சதுரகிரி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர்: வைகாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துளளது. மழையின் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் . தற்போது மழை இல்லாத காரணத்தால் சதுரகிரி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.