சிறுமியிடம் பெற்ற கருமுட்டை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை இணை இயக்குனர்.!

16 வயது சிறுமியிடம் கருமுட்டையை பெற்று விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக சேலம், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததாகவும், தவறுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பேட்டியளித்த அவர், சிறுமியிடம் இருந்து பெற்ற கரு முட்டைகள் ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறினார்.

21 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் மட்டும் தான் கருமுட்டையை அனுமதியோடு எடுக்க வேண்டும் என்றும் விஸ்வநாதன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.