இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் அகழ்வாய்வு பகுதியில் பழங்கால மனிதர்களின் பதப்படுத்தப்பட்ட மலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களது உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சுமார் 4,500 அண்டுகளுக்கு முன்னர் நியோலிதிக் காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் மக்கள் விவசாயம், வணிகம் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வாழ்ந்துவந்தனர். அப்போது இங்கிலாந்தில் வசித்த பழங்குடி மக்கள் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடி வந்தனர். அவர்கள் தங்களது மலத்தையும் அவர்கள் வளர்த்துவந்த காவல் நாய்களின் மலத்தையும் தங்கள் வசிப்பிடங்களில் பதப்படுத்தி வைத்துள்ளனர்.
வில்ட்ஷயர் பகுதியில் உள்ள பிரபல ஸ்டோன்ஹென்ஜ் அகழ்வாய்வு பகுதியில் இந்த மலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒட்டுண்ணிகள் முட்டையிட்டுள்ளன. இதனை ஆய்வு செய்த உயிரியல் விஞ்ஞானிகள் பழங்குடி மக்கள் விலங்குகளின் அழுகிய உடல் உறுப்புகளை உணவாக உட்கொண்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் அகழ்வாய்வு பகுதியில் பழங்கால மனிதர்களின் பதப்படுத்தப்பட்ட மலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களது உணவுப் பழக்கம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.