கொரோனா: மாநிலங்களை அலர்ட் செய்த மத்திய அரசு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. அதேசமயம், தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இதனிடையே, நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேசமயம், ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது நான்காம் அலைக்கு வித்திடலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார். “வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0” நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா இன்னமும் முடிந்துவிடவில்லை. சில மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமயத்தில் விழிப்புடன் இருப்பதும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதும் முக்கியமானதாகும். முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை பராமரிப்பது ஆகியவை தொற்று பரவுவதை தடுக்கும் என்று குறிப்பிட்டார்.

ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0 இயக்கத்தை விரைவுபடுத்துமாறும் 12 முதல் 17 வயதுவரை உள்ளவர்களுக்கான ஒன்றாவது மற்றும் இரண்டாவது தவணை டோஸ்கள் செலுத்துவதை விரைவுபடுத்துமாறும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களிடம் வலியுறுத்தினார்.

இந்தப்பிரிவினரை அடையாளம் காண பள்ளிகள் அடிப்படையில் முகாம்களை நடத்துமாறும் கோடை விடுமுறையில் உள்ளவர்களை வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொரோனா தடுப்பூசி
வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறும் அப்போது அமைச்சர் அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.