ஆறாய் ஓடும் தீப்பிழம்பு – மெய் சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ!

ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆறு போல் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹவாய் தீவில் உள்ள 5 எரிமலைகளில் கிலாவியா எரிமலையும் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இந்த எரிமலை வெடித்து நெருப்புப் பிழம்பு வெளியேறி வருகிறது.

எரிமலை
யில் இருந்து வெளியேறும் நெருப்புப் பிழம்பு ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல் வெளியேறி வருகிறது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. இந்த எரிமலை சீற்றத்தை ஹவாய் எரிமலை ஆய்வகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்தக் காட்சியைப் பார்க்கும் போது, எரிமலைப் பிழம்பைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Imvanex: குரங்கம்மைக்கு இம்வானெக்ஸ் தடுப்பூசி – ஐரோப்பிய ஒன்றியம் ஓகே!

இந்த வீடியோ பதிவிடப்பட்டு 12 மணி நேரத்திற்குள் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தக் காட்சியைப் பார்த்துள்ளனர். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்ததில், 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.