பிரித்தானிய குடும்பங்களுக்கான நிதியுதவியில் இரண்டாவது தவணை எப்போது?


குறைவான வருவாய் கொண்ட 8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கான நிதியுதவியில் இரண்டாவது தவணை எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குறைவான வருவாய் கொண்ட 8 மில்லியன் பிரித்தானிய குடும்பங்களுக்கு 650 பவுண்டுகள் நிதியுதவி அளிக்க முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஒப்புதல் அளித்திருந்தார்.

அந்த திட்டத்தின் படி, கடந்த வியாழன் முதல் வங்கிக் கணக்குகளில் முதல் தவணையான 326 பவுண்டுகள் செலுத்தப்பட்டது.
ஆனால் பெரும்பாலான குடும்பங்களுக்கு முதல் தவணை பணம் வந்து சேரவில்லை என்றே கூறப்படுகிறது.

நீங்கள் Tax Credits அல்லது Child Tax Credits-ல் இருந்தால், பணி மற்றும் ஓய்வூதியத் துறைக்குப் பதிலாக HMRC இலிருந்து நிதியுதவியைப் பெறுவீர்கள், எனவே அது தாமதமாக வந்து சேரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய குடும்பங்களுக்கான நிதியுதவியில் இரண்டாவது தவணை எப்போது? | Cost Of Living Payment2nd Instalment

மேலும், முதல் தவணை நிதியுதவியை பெற வேண்டும் என்றால், ஏப்ரல் 26, 2022 முதல் மே 25, 2022 வரையான யுனிவர்சல் கிரெடிட் பேமெண்ட்டுகளுக்கு நீங்கள் உரிமை பெற்றிருக்க வேண்டும்.

இதில், இரண்டாவது தவணை தொகையானது அக்டோபர் மாதத்தில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை மாத இறுதிக்குள் 8 மில்லியன் குடும்பங்களுக்கும் முதல் தவணை நிதியை செலுத்தவே அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.