மீண்டும் களத்தில் குதிக்கும் ஜெட் ஏர்வேஸ்.. 3 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம் வந்தாச்சு !

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் வணிக ரீதியிலான வணிக விமான சேவையை மீண்டும், 3 ஆண்டுகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை, மீண்டும் பல்வேறு நெருக்கடிக்களுக்கு பிறகு தொடங்கவுள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பு ஆண்டின் செப்டம்பர் இறுதிக்குள் தொடங்கலாம் என அதன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்திருந்தார். அப்போது ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு இன்னும் சில அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. அது விரைவில் கிடைக்கலாம் என கூறியிருந்தார்.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி-க்காக ரூ.80,000 கோடிக்கு மேல் செலவழிக்கலாம்.. !

அனுமதி சான்றிதழ்

அனுமதி சான்றிதழ்

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தினை இயக்குவதற்கான அனுமதி சான்றிதழை இந்திய விமான போக்குவரத்து ஆணையரகத்திடம் கடந்த மே மாதம் பெற்றனர். இதற்கிடையில் விமானத்தினை இயக்க பைலட்களை இயக்க நிறுவனம் பணியமர்த்தலிலும் இறங்கியுள்ளது. இதில் ஏர்பஸ் ஏ320, போயிங் 737NG, 737 மேக்ஸ் விமானங்களை இயக்கும் விமானிகளை பணியமர்த்தல் செயல்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது.

விமானிகளுக்கு அழைப்பு

விமானிகளுக்கு அழைப்பு

இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெட் ஏர்வேஸ் விரைவில் பறக்க தயாராக உள்ளது. ஏர்பஸ் ஏ320 அல்லது போயிங் 737 என் ஜி அல்லது மேக்ஸ் விமானங்களை இயக்கும் விமானிகளை எங்களுடன் சேர்க்க அழைக்கிறோம் என அறிவித்துள்ளது. இதற்காக [email protected] என்ற ஐடியினை அணுகலாம் என்றும் அறிவித்துள்ளது.

பெரும் கடன் பிரச்சனை
 

பெரும் கடன் பிரச்சனை

பெருத்த கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தினால் தனது சேவையினை தொடர முடியாமல் தவித்தது. இதற்கிடையில் தனது விமான சேவைக்கு பெரும் முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு கடன் வழங்கியோர் நிறுவனத்தினை ஏலத்தில் விட எஸ்பிஐ தலைமையிலாக குழு நடவடிக்கையில் இறங்கியது.

ஜலான் கல்ராக் கூட்டமைப்பு

ஜலான் கல்ராக் கூட்டமைப்பு

இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு ஜலான் கல்ராக் கூட்டமைப்பானது ஜெட் ஏர்வேஸினை ஏலத்தில் எடுத்தது. இதன் பிறகு தான் தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கி வந்த உள்நாட்டு சேவை மற்றும் வெளிநாட்டு சேவைகளையும் மீண்டும் தொடரவும் முயற்சிகள் நடைபெற்று வந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

jet airways 2.0 likely to take off commercial operations by September

jet airways 2.0 likely to take off commercial operations by September/மீண்டும் களத்தில் குதிக்கும் ஜெட் ஏர்வேஸ்.. 3 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம் வந்தாச்சு

Story first published: Wednesday, July 27, 2022, 20:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.