ஒரு லிட்டர் எண்ணெய் 4 லட்சமாம்.. அடேங்கப்பா..?

மல்லிகைப் பூ என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்று. அதிலும் மதுரை மல்லிகை பூவின் மனத்திற்கு மயங்காத பெண்களே இல்லை என்று கூட சொல்லலாம்.

மல்லிகை பூக்கள் வெறும் மலராக மட்டும் அல்ல, மருத்துவ பொருளாகவும், ஜாஸ்மின் எண்ணெய் தயாரிக்கவும், வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

உலகிலேயே மல்லிகை எண்ணெய் விலை மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இனி பெண்களின் ராஜியம் தான்.. இந்தியாவுக்கு ஜாக்பாட்..!

ஜாஸ்மின் எண்ணெய்

ஜாஸ்மின் எண்ணெய்

ஒரு கிலோகிராம் ஜாஸ்மின் எண்ணெய் விலையானது சுமார் 5000 டாலர்களாகும், இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ரூபாயாகும். இது மிக வாசனை மிக்க திரவியங்களில் பயன்படுத்தப்படும் மூலதனமாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு கிலோ எண்ணெய் தயாரிக்க 5000 மல்லிகை மொட்டுகளை பறிக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

பெரும்பாலும் ஏற்றுமதி

பெரும்பாலும் ஏற்றுமதி

இந்தியாவில் சுமார் 80 வகையான மல்லிகை பூ விளைகிறதாம். எனினும் இதில் பல வகையான பூக்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. குறிப்பாக மதுரையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகை பூவினை மெட்டாக இருக்கும்போதே பறித்து எடுத்து செல்கின்றனர்.

சம்பா மல்லிகை
 

சம்பா மல்லிகை

மல்லிகை ஆயிலை தயாரிக்க பெரும்பாலும் மதுரையில் விளைவிக்கப்படும் சம்பா அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பறிக்கப்படும் மலர்கள் கையாலேயே பறிக்கப்படுகிறது. அதுவும் அதிகாலையில் இருந்தே மொட்டாக பறிக்கப்படுகின்றது. இது மலர்ந்து விட்டால் பறிக்கப்படுவது இல்லை.

சரியான நேரத்தில் பறிக்கப்படும் மல்லி

சரியான நேரத்தில் பறிக்கப்படும் மல்லி

இதனை பறிப்பதற்கே செலவினம் அதிகம் என்ற நிலையில், இதனை சரியான முறையில், சரியான பருவத்தில் பறிப்பதும் சவாலான வேலையாக உள்ளது. காலம் தாழ்த்தியோ அல்லது முன்னதாகவோ பறித்துவிட்டாலும் கூட, இதுவும் வீண் தான். மொத்தத்தில் சரியான நேரத்தில் பறிக்கப்படும் மொட்டுகள் மட்டுமே எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது.

பூவின் விலை எவ்வளவு?

பூவின் விலை எவ்வளவு?

சரியான நேரத்தில் பறிக்கப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும் மல்லிகை மொட்டுகள், இதனை சரியான நேரத்தில் ஏற்றுமதி செய்யாவிட்டாலும் அதுவும் வீண் தான்.

இந்த மல்லிகை மொட்டுகள் அதன் தரத்தினை பொறுத்து கிலோவுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. விழாக்காலங்களில் இதன் விலை அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

why jasmine oil is so expensive? here’s why?

why jasmine oil is so expensive? here’s why?/ஒரு லிட்டர் எண்ணெய் 4 லட்சமாம்.. அடேங்கப்பா..?

Story first published: Friday, July 29, 2022, 13:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.