பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்தை ஆதரித்ததால் மனைவிக்கு 'முத்தலாக்' கொடுத்த கணவர்

பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை ஆதரித்ததால் மனைவிக்கு ‘முத்தலாக்’ கொடுத்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நதீம், அதே மாவட்டத்தை சேர்ந்த ஷானா இராம் என்ற பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் ஷானா இராம் பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. இதனாலேயே ஷானா இராமுக்கும் அவரது கணவர் முகமது நதீமுக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஷானா இராம் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்ததால் தனது மனைவி மீது கோபமாக இருந்த முகமது நதீம், மும்முறை ‘தலாக்’ என்று உச்சரித்து, ஷானா இராமை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார்.

image
இதனால் பாதிக்கப்பட்ட ஷானா இராம் மொராதாபாத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின்பேரில் முகமது நதீம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தலாக் தடை சட்ட மசோதா கடந்த 2019ம் ஆண்டில் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களை முத்தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை வழங்க முடியும்.

இதையும் படிக்க: தமிழக பாஜகவின் மையக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்த பிரதமர் மோடி… இதுதான் காரணமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.