அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும்

இன்று முதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவிக்கையில், வாகனங்களை மட்டுப்படுத்துதல், அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில் வாகன ஓட்டுனர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நாடு தற்சமயம் வழமையான நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்றில் இருந்து பெருமளவிலான வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கையும் இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.