இனி பணம் உங்களை தேடி வரும்.. எஸ்பிஐ-யின் வீடு தேடி வரும் சேவை.. எப்படி பெறுவது?

வங்கி துறையில் பற்பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் எளிதில் வங்கி சேவைகளை பெறும் விதமாக பற்பல அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு சேவைகளை பெறும் வசதிகள் வந்து விட்டன.

எஸ்பிஐயிலும் இத்தகைய வீடு தேடி வரும் சேவையானது உள்ளது. இதனை யாரெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை எப்படி பயன்படுத்திக் கொள்வது? மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

யாருக்கு இந்த சேவை?

எஸ்பிஐ-யின் இந்த வீடு தேடி வரும் சேவைகளை வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மருத்துவ ரீதியாக பிரச்சனையை எதிர்கொண்டுள்ளவர்கள் என பலரும் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா காலத்தில் பார்வை குறைபாடு பிரச்சனைகளை எதிர்கொண்டவர்கள் என பலருகும் சேவை வழங்கப்பட்டு வந்தது.

 இது தான் கண்டிஷன்

இது தான் கண்டிஷன்

வங்கிக் கிளையில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள், முகவரியினை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையினை பெற்றுக் கொள்ளலாம். இதே ஊனமுற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் மூன்று முறை இலவசமாக வீடு தேடி வரும் சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.

யோனோ ஆப் மூலம் எப்படி பெறுவது?
 

யோனோ ஆப் மூலம் எப்படி பெறுவது?

எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் இந்த சேவையினை பெறலாம்.

எஸ்பிஐ யோனோ ஆப்-பினை தொடங்கவும்.

அதில் சேவை மெனுவை அணுகவும்

இதில் டோர் ஸ்டெப் பேங்கிங் சேவையினை கிளிக் செய்யவும்

அடுத்ததாக காசோலைகள், பணம் அல்லது பிற கோரிக்கைகளை சமர்ப்பிக்கவும்.

வேறு எப்படி பெறலாம்?

வேறு எப்படி பெறலாம்?

எஸ்பிஐ-யின் வீடு தேடி வரும் சேவையினை பெற 1800 1037 188 அல்லது 1800 1213 721 என்ற இலவச எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.

இதன் மூலம் வீடு தேடி வரும் வங்கி சேவையினை பெறலாம்.

என்னென்ன சேவைகளை பெறலாம்?

என்னென்ன சேவைகளை பெறலாம்?

பணம் பெற்றுக் கொள்ளுதல்

கேஸ் டெலிவரி

காசோலை பெற்றுக் கொள்ளுதல்

காசோலை விண்ணப்பித்தல்

பார்ம் 15H பெற்றுக் கொள்ளுதல்

டெலிவரி டிராப்ட்ஸ்

டெர்ம் டெபாசிட் டெலிவரி

லைஃப் சர்டிபிகேட்

கேஓய்சி ஆவணங்கள் பெற்று கொள்ளுதல்

உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எவ்வளவு கட்டணம்?

எவ்வளவு கட்டணம்?

எஸ்பிஐ இந்த வீடு தேடி வரும் சேவைகளில் பணம் டெபாசிட் செய்வதற்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் உண்டு.

கேஸ் பேமென்ட்/பணம் எடுப்பதற்கு 75 ரூபாய் +ஜிஎஸ்டி கட்டணம் உண்டு

காசோலையை பெற்றுக் கொள்ள – 75 ரூபாய்+ஜிஎஸ்டி

காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கும் கோரிக்கைக்கான ஆவணத்தினை பெற – 75 ரூபாய் +ஜிஎஸ்டி

டெர்ம் டெபாசிட் ஆலோசனை & சேமிப்பு கணக்கிற்கான ஸ்டேட்மெண்ட் (இலவசம்) நடப்பு கணப்பு ஸ்டேட்மெண்ட் (Duplicate) – 100 ரூபாய் + ஜிஎஸ்டி

பணம் எடுத்தாலும் சரி, போட்டாலும் சரி அதிகபட்சம் 20,000 ரூபாய் மட்டும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ

English summary

SBI doorstep banking service: how to register for sbi doorstep banking

SBI doorstep banking service: how to register for sbi doorstep banking/இனி பணம் உங்களை தேடி வரும்.. எஸ்பிஐ-யின் வீடு தேடி வரும் சேவை.. எப்படி பெறுவது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.