வண்டலூர் பூங்காவில் உணவு சாப்பிடாத புலிக்கு சிகிச்சை: பூங்கா நிர்வாகம்

சென்னை: சென்னை அருகே வண்டலூரில் உயிரியல் பூங்காவில் உணவு உட்கொள்ளாத 6 வயது ஆண் புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரியல் பூங்காவின் கால்நடை  மருத்துவர்களால் புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான  என்.டி. ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்.டி. ராமராவின் மகள் உமா மேகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த உமாமகேஷ்வரி மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்கொலை செய்து செய்து கொண்டார்.

நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்க – தமிழ் பாட்டுப்பாடி அசத்திய கேரள பெண் எம்பி

ஈரோடு அருகே தமிழ் பாட்டுப்பாடி திருமணத்திற்கு மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என கேரளா எம்பி ரம்யா ஹரிதாஸ் நகைச்சுவையாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட கேரளா … Read more

பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிய மாணவர்கள்! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக – மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள கூடனூர் கிராமத்தில் உள்ள மராத்தி பள்ளியில் மாணவர்கள் கையெறி குண்டை வைத்து விளையாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், கையெறி குண்டை செயலிழக்கச் செய்தனர். செயலிழக்கச் செய்த கையெறி குண்டில் உருது எழுத்துக்கள் இருப்பதாக தெரிவித்த காவல்துறையினர், தொடர்ந்து … Read more

‘நானே வருவேன்’ பட அப்டேட் அளித்த செல்வராகவன் – விரைவில் முதல் சிங்கிள்?

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தின் இசை ஆல்பங்களுக்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘மயக்கம் என்ன’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நடிகர் தனுஷ் – இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றி படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் … Read more

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு| Dinamalar

தென்காசி: கடந்த ஜூலை 27, 28 ஆகிய தேதிளில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. மெயின் அருவியில், சமீபத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்திருந்தனர். இதனால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்தது. பின் ஜூலை 29ம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜூலை … Read more

ரசிகர்களுக்காக எடுத்த படம் பொன்னியின் செல்வன் : அதைசாத்தியமாக்கியது மணி சார் – ஜெயம் ரவி

கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படமாக உருவாகி உள்ளது. மணிரத்னம் இயக்க, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது முதல் பாடலாக பொன்னி நதி என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி : இந்த படத்தில் சிறப்பான விஷயம் என்னவென்றால், … Read more

5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு: 7ஆம் நாள் முடிவில் ஏலத்தொகை ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியது!

புதுடெல்லி, இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், இன்றுடன் ஒருவாரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், 7 நாட்களாக நடைபெற்ற ஏலம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கவுதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்து … Read more

காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 4-வது நாள் போட்டி அட்டவணை, நேரம் – முழு விவரம்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 4-வது நாள் இந்திய அணியின் போட்டி அட்டவணை பின்வருமாறு : ★ ஜூடோ: (பிற்பகல் 2:30 மணி முதல்) ஆண்களுக்கான 66 கிலோ … Read more

இஸ்ரேலில் கொடூரம்… பாலஸ்தீனிய சிறை கைதிக்கு பாலியல் அடிமையாக தாரை வார்க்கப்பட்ட பெண் காவலர்

ஜெருசலேம், இஸ்ரேல் நாட்டின் வடக்கே கில்போவா சிறைச்சாலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய எண்ணற்ற பாலஸ்தீனிய கைதிகள் பிடிபட்டு, அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால், சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். சிறைக்கு வெளியேயும், உள்ளேயும் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனினும், இந்த சிறையில் சில ஆண்டுகளுக்கு முன் பெண் காவலர்களை பாலியல் அடிமையாக கைதிகள் பயன்படுத்திய விவகாரம் வெடித்தது. ஆனால், பெரிய அளவில் அது கண்டு கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், கடந்த … Read more