சுற்றுலா விசா:மலேசியாவில் தொழில் விசாவாக மாற்றுவதாக கூறி மோசடி

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அந்த விசாவை அந்நாட்டில் தொழில் விசாவாக மாற்றுவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் ஆட்கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவ்வாறு சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்றும் நடைமுறை இல்லை. இதனால் இவ்வாறான மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர் தாம் தொடர்புகொள்ளும் வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களை … Read more

அரசு பேருந்திலிருந்து உருண்டு விழுந்த மாணவர்… இதுதான் காரணமா ?

அரசு பேருந்தில், கூட்ட நெரிசலால் படியில் நின்று பயணித்த பள்ளி மாணவர் கிழே விழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது. மேல்மருவத்தூர் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் அச்சரபாக்கத்தில் செல்லும் பேருந்தில், அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டது. இந்த பாதையில் குறைந்த பேருந்து போக்குவரத்தே இருப்பதாக இப்பகுதியினர் கூறுகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற கூட்ட நெரிசல் உள்ள பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது, படியில் நின்று பயணித்த பள்ளி மாணவர் கிழே விழுந்துள்ளார். இதை பேருந்துக்கு பின்னால் வந்த இரு சக்கர … Read more

சென்னை : வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பழங்கால மாரியம்மன், நடராஜர் சிலை – விசாரணையில் வெளியான உண்மை.!

சென்னை : அண்ணா நகரின் ஒரு வீட்டில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான, பல கோடி ரூபாய் மதிப்பு மதிப்புடைய நடராஜர் மற்றும் மாரியம்மன் உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் 5வது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நடராஜர்  சிலையும், அமர்ந்த நிலையில் இருக்கும் … Read more

இவர் ஐபிஎல் ஆடினால் ரூ.15 கோடி நிச்சயம்… சொல்கிறார் அஷ்வின்!!

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய டாப் ஆர்டரை தட்டித்தூக்கி நமது வெற்றியை தட்டிப் பறித்தவர்  பாகிஸ்தான் அணியின் இடதுகை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. தற்போது ஆசிய கோப்பை தொடரில் இவர் இல்லாமலே பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் அவர் வரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி கூடுதல் பலத்தோடு செயல்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த டி20 … Read more

நாளை வெளியாகிறது சென்னைப் பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவுகள்..!!

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி www.unom.ac.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் 14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் கையெழுத்திட்டு 300ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

‘‘டீசல் இனோவாவின் தயாரிப்பை நிறுத்தவில்லை…!’’ – டொயோட்டா சொல்ல வருவது என்னவென்றால்..?

‘இனிமேல் டீசல் இனோவா கிடையாது’ என்று நமது வலைதளத்தில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, ‘என்னது, டீசல் நின்னுடுச்சா!’ என்று இனோவா டீசலைப் பற்றி ஏகப்பட்ட நலவிசாரிப்புகள். Toyota Land Cruiser LC300: முதல்வர் ஸ்டாலினின் ரூ.3.5 கோடி கார்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த நிலையில் ‘‘இனோவா டீசல் மாடலின் புக்கிங்கைத்தான் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறோம். அதன் தயாரிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்!’’ என்று ஓர் அறிக்கை அனுப்பியிருக்கிறது டொயோட்டா. டொயோட்டா இப்படிச் சொன்னாலும், டீசல் வேரியன்ட்டின் … Read more

நகர்ப்புற உள்ளாட்சிகளை தூய்மையாக்க ரூ.1,338 கோடி திடக்கழிவு மேலாண்மை செயல்திட்ட கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளும், 2026-ம் ஆண்டுக்குள் குப்பையில்லா நகர தரமதிப்பீட்டில் 3 நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்காக ரூ.1,337.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னையில், திடக்கழிவு மேலாண்மை செயல்திட்ட பணிமனைகூட்டத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். மேலும், மாநகராட்சி, நகராட்சிகளில் பொதுமக்கள் இணையதளம் வழியாக தங்கள் வரியை செலுத்தவும், புகார்களைத் தெரிவிக்கவும், ‘TN Urban இ-சேவை’ என்ற கைபேசி செயலி, ‘எழில்மிகு நகரம்’ எனும் மாத இதழையும் … Read more

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த  உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மைதானம் அரசுக்கு சொந்தமானது என கர்நாடக அரசு அண்மையில் அறிவித்தது. இதையடுத்து சுதந்திர தினத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பந்தல் வைக்கப்போவதாக அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த‌ எஸ்டிபிஐ கட்சியினர், அதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் எச்சரித்தனர். இதனால் … Read more

8 வழிச்சாலையை திமுக எதிர்க்கவில்லை: அமைச்சர் எ.வ.வேலு உறுதி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரிசல் எழுத்தாளர் கி.ரா.வுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நினைவரங்கம், அவரது சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: “கி. ராஜநாராயணன்(Ki. Rajanarayanan) நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது. … Read more

சோவியத் யூனியனின் மூத்த தலைவர் மிகைல் கோர்பசேவ்(mikhail gorbachev) காலமானார்!

சோவியத் ஒன்றியத்தின் முதுபெரும் தலைவரான மிகைல் கோர்பசேவ் 1985 முதல் 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மிகைல் கோர்பசேவ்வின் சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாக மாறியது. சோவியத் யூனியன் பொருளாதாரம் மறைமுகமான பணவீக்கம் மற்றும் வினியோகப் பற்றாக்குறை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், மறுசீரமைப்பு என்ற பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தையும் மிகைல் … Read more