ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

துபாய், 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே … Read more

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சனா, ஏமனில் அந்ந நாட்டு அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த சூழலில் நீண்டகால பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. ஆனாலும் சண்டை நிறுத்தத்தை மீறி அவ்வப்போது சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. … Read more

இடதுசாரிகள் ஆளும் கேரளத்தில் கோயில் நிர்வாகம் எப்படி உள்ளது?

சமூக ஊடகங்களில் பழைய காணொலி காட்சி ஒன்று பரவியது. அந்தக் காணொலியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ரா , “இந்து கோயில்களில் உள்ள வருமானத்தை கருத்தில் கொண்டு இடதுசாரிகள் கோயில்களை கட்டுப்படுத்த நினைக்கின்றனர்” என்று கூறுவது போல் இருந்தது.இந்தக் கருத்துகளை கேரளத்தின் இடதுசாரிகள் நிராகரித்தனர். மேலும் வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிதியையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். கேரளத்தில் கோயில்களை நிர்வகிப்பது யார்? கேரளத்தில் கோயில்கள் மாநில அரசின் கீழ் உள்ள அறக்கட்டளை, … Read more

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் சுகாதாரமற்ற உணவு..? உணவில் புழு, பூச்சி இருப்பதாக கூறி மாணவிகள் ஆர்ப்பாட்டம்..!

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பல்கலைக்கழகத்தில் உள்ள 8க்கும் மேற்பட்ட விடுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். மாணவிகள் அனைவருக்கும் தற்போது ஒரே இடத்தில் சமையல் செய்து பரிமாறப்படும் நிலையில், உணவில் புழு, பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறும் மாணவிகள், காலை காலி தட்டு, பக்கெட்டுகளுடன் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் … Read more

சென்னையில் இருந்து விமானம் மூலம் அக்.9-ம் தேதி கேதார்நாத், கங்கோத்ரிக்கு ‘சார்தாம் யாத்திரை’

சென்னை: சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட தலங்களை காணும் விதமாக, ‘சார்தாம் யாத்திரை’ என்ற விமான சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில், சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்வார் ஆகிய புனித தலங்களை காணும் விதமாக,‘சார்தாம் யாத்திரை’க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா சென்னையில் இருந்து அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது. 13 நாட்கள் விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு … Read more

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை உடன் இருந்த நாய்

இடுக்கி: கேரளாவில் நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை, அவர்கள் வளர்த்த நாய் உடன் இருந்துள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்ததில் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடயாதூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சோமன் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதி இங்கு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நாய் காலில் காயத்துடன், மீட்புக் குழுவினருடன் சேர்ந்து சுற்றியது. அந்த நாய் சோமன் … Read more

சீன கம்யூனிஸ்ட் மாநாட்டையொட்டி பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா ஊரடங்கு தீவிரம்

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங்நகரத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேற்று மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டனர். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் மிக தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். அந்த வகையில், 40 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங்கை சுற்றியுள்ள ஹைபேயி மாகாணத்தில் இந்த வார இறுதி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற … Read more

கனடாவில் ஆசிய உணவகத்தில் திட்டமிட்டு விஷம் கலந்தார்களா? மருத்துவ அதிகாரி வெளியிட்ட புதிய தகவல்

பூவில் காணப்படும் ஒருவகை நச்சுப்பொருளான அகோனைட் எனப்படும் ஒன்று என்று சந்தேகம் நால்வர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள Delight Restaurant & BBQ உணகவகத்தில் சாப்பிட்ட சுமார் 12 பேர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், மருத்துவ உதவியை நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read more

இன்ஸ்டாகிராமில் பழகிய சென்னை நண்பரை பார்க்க வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிகள்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்

நெமிலி: இன்ஸ்டாகிராமில் பழகிய சென்னையை சேர்ந்த நண்பரை பார்க்க, பள்ளி மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாணவிகளை அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த அக்காள், தங்கை. இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள், கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் படிப்பதற்காக பெற்றோர் வாங்கி கொடுத்த ஆன்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி … Read more

உச்ச நீதிமன்றம் உத்தரவு குஜராத் கலவர வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு

புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரியும், இழப்பீடு கோரியும் 10 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதால் அவற்றை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. இதே போல, பாபர் மசூதி இடிப்பு … Read more