தமிழ்நாடு திரைப்பட விருதுகள் – வெளியானது அந்த அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வரும் 4-ஆம் தேதி மாலை 5.00 மணியளவில்  சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ .2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 இலட்சம், மூன்றாம் பரிசு ரூ. 75 ஆயிரம், காசோலை வழங்கப்பட உள்ளது.

மேலும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கமும். சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ. 2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1 இலட்சமும் வழங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து, ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 இலட்சம் என 20 பேருக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட உள்ளது. மேலும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008 – 2009 ஆம் கல்வியாண்டு முதல் 2013-2014 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த படக்குழுவினர் 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் காசோலையும் , 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளத

மேலும், சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த நெடுந்தொடர்களின் படக்குழுவினர் மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்தம் 314 பேருக்கு ரூ .52,75,000 ஆயிரத்திற்கான காசோலையும் விருதாளர்களின் பெயர் பொறித்தத் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளன .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.