உலகின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்கள்.. ஸ்விக்கி, ஜொமைட்டோவிற்கு எந்த இடம்?

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்தியாவை பொருத்தவரை Zomato மற்றும் Swiggy ஆகிய இரண்டு நிறுவனங்கள் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளன.

இந்த நிலையில் Zomato மற்றும் Swiggy ஆகிய இரண்டு நிறுவனங்களும் உலக அளவில் அதிக உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..!

டாப் 10 உணவு நிறுவனங்கள்

டாப் 10 உணவு நிறுவனங்கள்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு விநியோக தளங்களான Zomato மற்றும் Swiggy ஆகியவை உலகின் டாப் 10 இ-காமர்ஸ் அடிப்படையிலான உணவு விநியோக நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. கனடாவை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான ETC குழுமத்தின் ஆய்விபடி, Swiggy 9 வது இடத்திலும் Zomato 10 வது இடத்திலும் உள்ளன.

முதல் 3 நிறுவனங்கள்

முதல் 3 நிறுவனங்கள்

இந்த பட்டியலில் சீனாவின் Meitua முதல் இடத்திலும், பிரிட்டனின் Delivero 2வது இடத்திலும் Uber நிறுவனத்தின் துணை நிறுவனமான Uber Eats மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

சீனாவின் Meituan நிறுவனம்
 

சீனாவின் Meituan நிறுவனம்

பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2010ஆம் ஆண்டு வாங் ஜிங்கால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் சீனாவில் மட்டுமின்றி உலக அளவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 5,000 பணியாளர்கள் இருந்தனர். 2018ஆம் ஆண்டில் 290 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களையும் 600 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது

Zomato நிறுவனம்

Zomato நிறுவனம்

உலக அளவில் 9வது இடத்தை பிடித்துள்ள Zomato நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அனைத்து பங்கு ஒப்பந்தத்தில் ரூ. 4,447.5 கோடிக்கு வர்த்தக ஸ்டார்ட்-அப் நிறுவனமான Blinkit நிறுவனத்தை கையகப்படுத்த ஒப்புதல் அளித்தது. Zomato ஏற்கனவே Blinkit நிறுவனத்தில் 9 சதவீத பங்குகளை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Swiggy நிறுவனம்

Swiggy நிறுவனம்

உலக அளவில் 8வது இடத்தை பிடித்துள்ள Swiggy நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உணவுக்கான தேடல் இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆரோக்கியத்தை பிரதானமாக கொண்ட உணவங்களுக்கான தேவையும் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் ஆர்டர் 200 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக உணவுகளை ஆர்டர் செய்வதில் பெங்களூரு வாடிக்கையாளர்கள் முதல் இடத்தையும் ஹைதராபாத், மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Swiggy, Zomato get top 10 global online food delivery Companies: Which Are The Top 3?

Swiggy, Zomato get top 10 global online food delivery Companies: Which Are The Top 3? | உலகின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்கள்.. ஸ்விக்கி, ஜொமைட்டோவிற்கு எந்த இடம்?

Story first published: Friday, September 23, 2022, 9:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.