தென் மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம்

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தை கன்னியாகுமரியில் இன்று (செப்.7) மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்வர் தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி சென்று, அங்கு இரவு தங்குகிறார். வரும் 8-ம் தேதி திருநெல்வேலி ஹைகிரவுண்டு பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து விருதுநகர் சென்று, திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார், பின்னர் மதுரைக்குச் … Read more

'வெறுப்பரசியலுக்கு என் தந்தையை இழந்ததுபோல் எனது தேசத்தை இழக்கமாட்டேன்' – ராகுல் காந்தி

ஸ்ரீபெரும்புதூர்: “வெறுப்பரசியலுக்கு என் தந்தையை இழந்ததுபோல் என் தேசத்தை இழக்கமாட்டேன்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்கவிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பரசியலுக்கு தனது தந்தையை இழந்ததுபோல் இந்த தேசத்தை இழக்க மாட்டேன் என்று ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்பு அரசியலுக்கும், பிரிவினைவாதத்துக்கும் … Read more

Neet Exam: 'திமுகவுக்காக நீட் தேர்வு ரத்தா? ஒருபோதும் முடியாது' அண்ணாமலை திட்டவட்டம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது: “70 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்திய நாடு சீரழிந்தது கடந்த எட்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் எப்படி வளர்ச்சி பெற்றது என்பதை ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் தெரிந்துக்கொள்வார் என்றார். நீட் தேர்வு எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது. திமுகவினர் நடத்தும் … Read more

"தந்தையை இழந்தேன்.. அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன்" ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

சென்னை: கன்னியாகுமரியில் “பாரத் ஜோடோ” யாத்திரை தொடக்க விழாவுக்காக தமிழ்நாடு வந்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார. மத்திய பாஜக அரசின் தவறான  செயல்பாடுகள், கொள்கைகள் காரணமாக பொருளாதாரம், அரசியல், சமூகம் … Read more

பொண்ணு ஓகே சொல்லிடுச்சு.. பாவ்னி – அமீர் ஜோடிக்கு விரைவில் திருமணம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், இதுவரை ஒளிபரப்பான சீசன்களிலேயே 5-வது சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தான் சிறப்பாக விளையாடியதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் சிக்கிய போட்டியாளர் பாவ்னி, தாமரையுடன் பிரச்சனை பின்னர் அபிநய் காதல் என அடுக்கடுக்காக அடிபட்ட பெயர் பாவ்னி தான்.  இறுதியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அமீராலும் பாவ்னி பெயர் அதிகமாக பேசப்பட்டது, அமீர் பாவ்னி பின்னாலேயே சுற்றுவது சக போட்டியாளர்களுக்கு … Read more

2 குழந்தைகளை கிணற்றில் வீசிகொன்று தாய் தற்கொலை

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 27). இவர்களுக்கு பிரசாந்த் (4) என்ற மகனும், 6 மாதத்தில் லதா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். கணவன் மனைவிக்கிடையே … Read more

PS1 Audio launch: “ `சீக்கிரம் எடுத்து விடு' என எம்.ஜி.ஆர் என்னிடம் ரைட்ஸைக் கொடுத்தார்! "- கமல்

மணிரத்னம் இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இயக்குநர் ஷங்கர், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் எனப் பலரும் கலந்து கொண்டனர் விழாவில் நடிகர் ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் ஒன்றாக மேடையேறினர். அதற்கு முன்பாக, நாயகன்- தளபதி … Read more

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி கைது

கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சைபர் கிரைம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

நிலக்கரி கடத்தல் வழக்கு: மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சர் மலாய் கட்டக்கிற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிலக்கரி கடத்தல் வழக்கில் கொல்கத்தாவில் 5 இடங்களிலும், அசன்சோலில் ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருகிறது.