2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டின் விளையாட்டு வீரர்களுக்கான முதல்வர் விருதுகள் அறிவிப்பு

சென்னை: கடந்த 2018-19 மற்றும் 2019-20ம்ஆண்டுகளில் ‘முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு’ தேர்வானவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருது தொகைக்காக தமிழக அரசு ரூ.16.30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 1996-ம் ஆண்டு முதல், முதல்வர் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2004-ல் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், 2008-ல் விளையாட்டு நிர்வாகி,கொடையாளர், நடுவர்களும் விருதாளர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் – … Read more

உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: மும்பைக்கு 3-ம் இடம்

மும்பை: உலகில் போக்குவரது நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மும்பை உள்ளது. பெங்களூரு (5), டெல்லி (6) ஆகிய நகரங்களும் முதல் 10 நகரங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. உலக நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக ‘கோஷார்ட்லி’ என்றஅமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில் போக்குவரத்தில் உலகின் மிக நெரிசலான நகரகமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் உள்ளது. கொலம்பியா தலைநகர் பொகோட்டா இரண்டாமிடம் பிடித்துள்ளது. ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் 4-ம் இடத்தில் உள்ளது. Source link

ஓடும் ரயில் அர்ஜூன் சம்பத் கைது.. திண்டுக்கல்லில் நடந்தது என்ன?

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்தியாவின் ஒற்றுமை(bharat jodo yatra) என்ற பெயரில் நாளை கன்னியாகுமரியில் தொடங்குகிறார் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி. இதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர். தேசிய அளவிலான இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,600 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்திற்காக டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் … Read more

இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவு

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 3,570 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் இத்தேர்வை … Read more

கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல்

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர் தனசேகரனிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 8ம் தேதி நடைபெற்ற சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து உதவி ஜெயிலரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

ஸ்ரீபெரும்புதூர்: ஒற்றுமை நடைபயணம் இன்று தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டு வைத்தார்.

தேவஸ்தான குழுவினர் சந்திப்பு எதிரொலி குஜராத்தில் ஏழுமலையான் கோயில்: நிலம் ஒதுக்கீடு செய்வதாக மாநில முதல்வர் உறுதி

திருமலை: குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி மற்றும்  உறுப்பினர் கேதன்தேசாய் ஆகியோர் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவுப்படி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் சனாதன இந்து தர்ம பிரசாரத்திற்காக தேவஸ்தானம் எடுத்துள்ள நடவடிக்கைகளை குஜராத் முதல்வரிடம் விளக்கினார். ஜம்முவில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டும் … Read more

திருச்சூர் நகருக்கு ஐ.நா., அங்கீகாரம்| Dinamalar

புதுடில்லி கேரளாவின் திருச்சூர், நிலாம்பூர் ஆகிய நகரங்களை, சர்வதேச அளவிலான கற்றல் நகரங்கள் பட்டியலில், ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனெஸ்கோ’ அமைப்பு இணைத்துள்ளது. ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, பல்வேறு நாடுகளில் உள்ள நீண்ட கால கற்றல் முறையை ஊக்குவிக்கும் வகையில், அவற்றில் சிறப்பாக செயல்படும் நகரங்களை அங்கீகரித்து வருகிறது. இவ்வாறு அங்கீகரிக்கப்படும் நகரங்கள், சர்வதேச அளவிலான கற்றல் நகரங்களின் பட்டியலில் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் பட்டியலில், தற்போது 44 நாடுகளைச் சேர்ந்த, … Read more

பாஜகவில் இணைந்த அலிசா அப்துல்லா

அதர்வா நடிப்பில் வெளியான இரும்பு குதிரை என்ற படத்தில் நடித்தவர் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரான இவரும், நடிகரும், பைக் ரேஸருமான அஜித் குமாரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் அவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அலிசா அப்துல்லா தனது சோசியல் மீடியாவில் கூறுகையில், பாஜக குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த … Read more