உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனை: குளிர்பானம், பால் பறிமுதல்

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தியேட்டரில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி சிவலிங்கம் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் குளிர்பானங்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதிகள் அச்சிடப்படவில்லை. மேலும் அங்கிருந்த பால் சுகாதாரமான முறையில் இல்லாமல் இருந்ததுடன் உள்ளே பூச்சி கிடந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் … Read more

புதிய கட்டண விகிதங்களை அறிவித்தது தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு: தற்போது இருப்பதை 10-22% கட்டணம் குறைப்பு என தகவல்

சென்னை: புதிய கட்டண விகிதங்களை போக்குவரத்து துறை அமைச்சரிடம் தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பினர் வழங்கினார். தற்போது இருப்பதை 10-22% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை – கோவை: ரூ.1,815 முதல் ரூ.3,025 வரை  சென்னை – மதுரை: ரூ.1,776 முதல் ரூ.2,688 சென்னை – நெல்லை: ரூ. 2,063 முதல் ரூ. 3,437 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் தொடக்கம்

டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் தொடங்கியது. 2020-ல் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.

`ஓசில பயணம் செய்றாங்க என விளையாட்டா சொன்னேன்’- அமைச்சர் பொன்முடி விளக்கம்

பேருந்தில் பெண்கள் ஓ.சியில் செல்கிறீர்கள் என அமைச்சர் பொன்முடி பேசியது தொடர்பான வேள்விக்கு, “விளையாட்டாக பேசியதை பெரிது படுத்த தேவையில்லை” என அமைச்சர் பொன்முடி மழுப்பலாக பதலளித்தார். தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைகழக தொழில் நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, ஆய்வு மேற்கொண்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு … Read more

‘போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என தெரியவில்லை’ – இயக்குநர் பார்த்திபன்

தொடர்ந்து சோழர்கள் தொடர்பான கதாபாத்தரங்களே வருவதால், போன ஜென்மத்தில் தான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ சோழனின் பெருமையை சொல்லி நம்மால் மாளாது. ஆயிரம் … Read more

மொபைல் போன் பறிக்க முயன்று ரயில் ஜன்னலில் தொங்கிய திருடன்

பாட்னா : பீஹாரில், ரயிலில் பயணியின் மொபைல் போனை பறிக்க முயன்று, ஜன்னலில் தொங்கியபடியே வந்த திருடன் குறித்த ‘வீடியோ’ வேகமாக பரவி வருகிறது. பீஹாரில், பாஹல்பூர் மாவட்டத்தில், லைலாக் மற்றும் கோகாவுக்கு இடைப்பட்ட ரயில் நிலையத்தில், ஜமால்பூர் சாஹிப்கஞ்ச் பயணியர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணி ஒருவர், தன் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, நடைமேடையில் இருந்து திருடன், அப்பயணியின் மொபைல் போனை பறிக்க முயன்றார். ஆனால், பயணி திருடனின் … Read more

3டியில் தயாராகும் ஷாகுந்தலம்: தாமதமாகும் வெளியீடு

உலகப்புகழ் பெற்ற காளிதாசின் 'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும் படம் 'ஷாகுந்தலம்'. இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது படத்தை 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கி வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் தான் வெளிவரும் எனறு தெரிகிறது. இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி … Read more

தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முழு விவரம்!!

தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து 2000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படும் நிலை உள்ளதால், அரசு போக்குவரத்து கழகம், இன்று முதல் … Read more

கல்லூரியை சுத்தம் செய்ய மாணவர்களை பயன்படுத்திய ஆசிரியர்கள்?! – கூரையில் இருந்து கீழே விழுந்த மாணவர்

சேலம், ஆச்சாம்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரது மகன் கோகுல். இவர் சேலம் அரசு தொழில் பயிற்சி கல்லூரியில் டர்னர் படிப்பில் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற நிலையில் வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை கொண்டாடுவதற்கு முன்னேற்பாடு பணிகள் அரசு கல்லூரி நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது. இதில் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களையே சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அப்போது கோகுல் கல்லூரியின் மேற்கூரையில் ஏறி சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது, … Read more

தமிழக கோயில்களில் ஊழியர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

புதுடெல்லி: தமிழக கோயில்களை நிர்வகிக்க அரசு ஊழியர்களை நியமனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக கோயில்களுக்கு ஊழியர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரமில்லை. தமிழகம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் கோயில்களில், 19 ஆயிரம் கோயில்களில் பரம்பரை அறங்காவலர்கள் இல்லை.எனவே அறங்காவலர் இல்லாத நிலையில், உரிய … Read more