தடை செய்யப்பட்ட 63 ஆபாச இணையதளங்கள் – என்னென்ன தெரியுமா?

கடந்தாண்டு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை (IT Rules 2021) வெளியிட்டிருந்தது. அந்த விதியை மீறி, பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் ஆபாச புகைப்படங்கள்/காணொலிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி புனே நீதிமன்றம் 63 ஆபாச இணையதளங்களை சுட்டிக்காட்டியது. அதேபோன்று, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 4 இணையதளங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.  இந்த நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, பரிந்துரைக்கப்பட்ட 67 இணையதளங்களில், 63 இணையதளங்களை தடை செய்யுமாறு, இணைய நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை … Read more

பொன்னியின் செல்வன் – வேற லெவல் அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க!

ஒன் லைன்ல நிச்சயமா இந்தப் படத்தோட கதையைச் சுருக்க முடியாது. ஏகப்பட்ட ஒன்லைனர்ல ஒண்ணு மட்டும் சொல்லலாம். சோழ ராஜ்ஜியத்துக்கும், சோழ ரத்தத்துக்கும் ஆபத்து வந்தால், அதற்கு ஒரு பழிவாங்கும் படலமும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு வாரிசும் பின்னணியில் இருந்தால் அதுவே பொன்னியின் செல்வன்.  இளவரசன் ஆதித்த கரிகாலனின் ஆணைக்கிணங்க அரசரையும், இளவரசன், இளவரசியைச் சந்திக்கப் புறப்படும் வந்தியத்தேவன், சோழ சாம்ராஜ்ஜியத்தை அழிக்கத் துடிக்கும் நந்தினி, பழுவேட்டரையர் மற்றும் சிற்றரசர்கள் மூலம் மன்னராக விரும்பும் மதுராந்தகன் … Read more

வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரித்தானியர்: நண்பர்களிடம் கடைசியாக கூறிய அந்த உண்மை

கட்டாரில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக்கிண்ணம் தொடர்பில் கட்டாரை விளம்பரப்படுத்தும் பணி அவரது மனைவி தெரிவிக்கையில், பதில் கிடைக்காத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியுள்ளது கட்டார் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரித்தானியர் ஒருவர், கடைசியாக தமது நண்பர்களிடம் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரத்தில் பிரித்தானிய உள்விவகாரத்துறை உரிய நடவடிக்கை முன்னெடுக்கும் எனவும், அந்த நபரின் குடும்பத்தாருக்கு உதவும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டார் விமான சேவை நிறுவனத்தின் கீழ் செயற்படும் Discover Qatar என்ற … Read more

டெரகோட்டா மனித முகம், பறவை தலை கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் உள்ள வைப்பாற்றின் வடகரை மேட்டுக்காடு பகுதியில், கடந்தாண்டு பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையெடுத்து அப்பகுதிக்கு தொல்லியல்மேடு என பெயரிடப்பட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கின. தொல்லியல் மேட்டில் ஏற்கனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை … Read more

திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7-ல் நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 அளித்து ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தை நாளை மறுநாள் தொடங்கிவைக்க இருந்தது. அங்கு உணவு பொருட்கள் உட்பட மளிகை பொருட்கள் 17 ஆயிரம் நியாய விலை … Read more

நவராத்திரி விழா: தனலட்சுமி அம்மனுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

நவராத்திரியை முன்னிட்டு 30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு ஸ்ரீ தனலட்சுமி அம்மன் அலங்காரிக்கப்பட்டார். நவராத்திரியை முன்னிட்டு வீடுகளிலும், கோவில்களிலும் நவராத்திரி கொலு வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறத. இதனிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 4 ஆம் நாளான இன்று … Read more

புதுச்சேரி: மின் ஊழியர் பிரச்னை – ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆளுநர தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக இன்று மூன்றாவது நாளாக ஆங்காங்கே பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் … Read more

ஓபிஎஸ் மேல்முறையீட்டில் இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில், ‛தீர்ப்பு வெளியாகும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த மாட்டோம்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவாதம் அளித்தது. மேலும் இந்த வழக்கில் பழனிசாமி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில், ஜூலை 11ல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இது தொடர்பாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் … Read more