பொன்னியின் செல்வன் – தியேட்டர்களில் குவியும் குடும்பத்தினர்

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை கடந்த 70 வருடங்களாக பல தலைமுறையினர் படித்து வந்தனர். இன்றைய இளம் தலைமுறையினர் வேண்டுமானால் கொஞ்சம் குறைவாகப் படித்திருக்கலாம். ஆனால், தற்போது 30 வயக்கு மேல் உள்ளவர்கள் பலரும் நாவலைப் படித்திருப்பார்கள். நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் இவ்வளவு வருடங்களாக இந்த நாவல் திரைப்படமாக உருமாறவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை இன்று மணிரத்னம் மற்றும் குழுவினர் போக்கிவிட்டனர். எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோர் படமாக எடுக்க நினைத்து முடியாமல் போனதை … Read more

மக்களே முக்கிய தகவல்..!! உங்க பெயரில் போலி சிம் கார்டு இருக்கா? கண்டுபிடிப்பது, நீக்குவது எப்படி?

சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் அட்டை, ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஆதாரை ஆவணமாக வைத்தே சிம்கார்டுகளும் வழங்கப்படுவதால், ஒரு ஆதாரில் எத்தனை சிம்கார்டுகள் வாங்கலாம்? போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருந்தால் தெரிந்து கொள்வது எப்படி? போலி சிம் கார்டுகளை நீக்குவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வோம். முதலில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் இணையதளமான tafcop.dgtelecom.gov.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும். அதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதன்பிறகு உங்கள் மொபைல் … Read more

தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்… – வேகம் காட்டுகிறதா காவல்துறை?!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பா.ஜ.க., ஆர்,எஸ்,எஸ் அமைப்பினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 23 -ஆம் தேதி கோவை குனியமுத்தூரில் பாஜக பிரமுகர் பரத் என்பவரின் வீட்டின் மீது நள்ளிரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், வீட்டு … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து, ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை தசரா விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் தரப்பில், அதற்குள் அதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தயாராகி வருகின்றனர். எனவே, … Read more

பாஜக ஆளும் மாநிலத்தில் தொடங்கும் இந்திய ஒற்றுமை பயணம்: கர்நாடகாவில் ராகுல் காந்திக்கு வரவேற்பு

பெங்களூரு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்திரை) 23-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. முதன்முதலாக பாஜக ஆளும் மாநிலத்தில் ராகுல் இன்று தனது பயணத்தைத் தொடங்குகிறார். கர்நாடகா வந்த ராகுல் காந்தியை அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில எல்லைக்குச் சென்று வரவேற்றார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி செப்.7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கினார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் … Read more

ஓபிஎஸ் கை மீண்டும் ஓங்குகிறதா? எடப்பாடிக்கு பிரேக் போட்ட உச்ச நீதிமன்றம்!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் இது தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை சேர்த்து தசரா விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு ஓபிஎஸ் தரப்போ, எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச் செயலாளர் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: என்னது 3 பேர் போட்டியா? ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்…!

நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சி என்ற சிறப்பு பெற்ற காங்கிரஸ் கட்சி, அதன் தலைமை பீடத்தை அலங்கரிக்க ஆட்களின்றி தவித்து கொண்டிருக்கிறது. காலங்காலமாக நேரு குடும்பத்தினர் கட்சி தலைவர் பதவியை வகித்து வந்த நிலையில் ராகுல் காந்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனவே நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவிக்கு வர வேண்டியுள்ளது. இதற்காக வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த … Read more

தீவிரமாகுமா குரங்கம்மை? டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு நோய்த்தொற்று உறுதி

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, தலைநகரில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகள் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, 30 வயதான நைஜீரிய பெண் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.   ஆதாரங்களின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளைத் தவிர, வேறு … Read more

செப்டம்பர் 30 – த்ரிஷாவுக்கு ஸ்பெஷல்; காரணம் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கோலிவுட்டை ரூல் செய்துவருபவர் த்ரிஷா. 20 வருடங்களுக்கும் மேலாக டாப் 5 ஹீரோயின்களில் த்ரிஷாவும் தன்னை தக்கவைத்திருக்கிறார். அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நிலைத்து நின்றாலும் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் குந்தவை கதாபாத்திரம் அவரது திரைப்பயணத்தில் ஒரு வைரக்கல் என்றே கூறலாம். ஏனெனில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் தன்மையை எழுத்தாளர் கல்கி அப்படி வார்த்திருப்பார்.  … Read more

புளோரிடாவை தாக்கிய இயான் புயலால் மாகாணம் முழுவதும் கடுமையான பாதிப்பு..!

அமெரிக்காவின் புளோரிடாவை தாக்கிய இயான் புயலால் மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சுவதாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இயான் புயல் நேற்று முன்தினம் புளோரிடாவை தாக்கியது இதனால் நகர் முழுவதும்  வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது மேலும் மின்சாரம் தடைபட்டுள்ளதால் இருளில் முழ்கியுள்ளது . புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக புளோரிடா மாகாண கவர்னர் ரான் … Read more