பொன்னியின் செல்வன்:“கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகம்;காரணம் இதுதான்!" தஞ்சாவூரில் நடிகர் பார்த்திபன்

பொன்னியின் செல்வன் படம் மிகுந்த எதிர்பார்ப்போடு இன்று வெளியாகியிருக்கிறது. இதில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் தஞ்சாவூரில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பொன்னியின் செல்வனில் நடித்ததையும், படத்தை சோழ தேசமான தஞ்சையில் வந்து பார்ப்பதையும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுவதாக தெரிவித்தார். பொன்னியின் செல்வன் படத்தை காண வந்த பார்த்திபன் உலகமே வியக்கும் வண்ணம் ஆட்சி செய்த சோழமன்னர்கள். கலைக்கும்,கட்டடக் கலைக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை, மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு … Read more

போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு: தென்காசி சார்பதிவாளர் உள்பட 4 பேர் கைது..!

நெல்லை: போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்த தென்காசி சார்பதிவாளர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுபோல போலி பத்திரப்பதிவு புகார் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவு அலுவலக தணிக்கை பிரிவு செயலாளராக  பணியாற்றி வரும் அஞ்சனகுமார் குமார் என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையிலும், போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய சார்பதிவாளருக்கு … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்தி அரசாணை வெளியீடு: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்த அரசாணையை புதுச்சேரி அரசு வெளியீட்டுள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவை பின்பற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாணை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தது இது தொடர்பாக 15 மாநிலங்களில் … Read more

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8 மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி, மதுரை, திருவாரூர், திருச்சி, சேலம், கோவை, வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி வரலாவை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கெலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஜம்மு கோர்ட் நீதிபதி முகமது மாக்ரோவை ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் பலி

வாணியம்பாடி அருகே கனரக வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே உள்ள மேம்பாலத்தின் மீது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் மேம்பாலத்தின் மீது கற்கள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் திடீரென பழுதானதால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து கனரக வாகனம் மீது … Read more

பூகோள அரசியல் போக்குகள்,பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடைச் செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். உலகளாவிய அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நேற்று (29) காலை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பிரதான … Read more

சில்லறைய மாத்துறோம்.. சீக்கிரமா கொடுக்குறோம்.. துரைமுருகன் 'லகலக'..!

“குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம்; விரைவில் வழங்குவோம்” என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பேசிய அவர், “தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மு.க.ஸ்டாலினுடைய ஆட்சி மக்களோடு மக்களாக … Read more

தேனி: செப்டிக் டேங்க்கில் விழுந்து 2 சிறுமிகள் பலி; கொதிப்பில் சாலை மறியலில் இறங்கிய மக்கள்!

​தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்திருக்கிறது பண்ணைப்புரம் பேரூராட்சி. அங்கிருக்கும் பாவலர் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதாஸ்ரீ (7), மேற்குத் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் மகள் சுபஸ்ரீ (6) ஆகியோர் அந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ​2-ம் வகுப்பு படித்து வந்தனர்.  செப்டிக் டேங்க் ​இந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள  பெண்கள் பொது சுகாதார வளாகத்தின் ​செப்டிக் டேங்க் மேல் பகுதியில் சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் சிமென்ட் கல் மேல் மூடி … Read more