மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றினால் மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை: தமிழகத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா,உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இப்பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்ததால் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் 2013-ல் தடை விதித்தது. இருப்பினும் பல்வேறு … Read more

"காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப் போன மருந்து" – அசாம் முதல்வர் விமர்சனம்

புதுடெல்லி: “காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப்போன மருந்து. அவர்களால் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், “காங்கிரஸ் இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக உணர்கிறது. பாரதிய ஜனதா கட்சி அவர்களிடமிருந்து எப்போதோ ஆட்சியை பறித்து விட்டது. இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இயல்பான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. மேலும் அவை கட்சிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் காந்தி குடும்பத்தை ஒரு எதிர்க்கட்சியாக பார்க்கக் கூடாது. … Read more

ஜெயக்குமார் வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் மகள், மருமகன் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: மோடி கொடுத்த சிக்னல்… மும்பைக்கு கிளம்பிய 2.0!

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 15, 2021ல் பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்காக ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக உழைத்து வந்தனர். முன்னதாக நியூ டெல்லி – வாரணாசி மற்றும் நியூ டெல்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வரிசையில் மூன்றாவது ரயிலை பிரதமர் மோடி … Read more

மழலை மாணவர்களுக்கு அயோத்தியில் நடக்கும் கொடுமை! சாதமும் உப்பும் மட்டுமே உணவு!

அயோத்தியா: ராமர் ஜென்ம பூமியான அயோத்தியில் அரசுப் பள்ளியில் மதிய உணவில் பரிமாறப்பட்ட உணவு வீடியோ வெளியாகி அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகி இருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில், தரையில் அமர்ந்தபடி பள்ளிக் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதத்துடன் உப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் … Read more

“அவுரங்கசீப்பை விட அதிக கோயில்களை இடித்தவர் மோடி” மோடியை அர்ச்சித்த விஸ்வநாதர் ஆலய தலைமை பூசாரி…

அவுரங்கசீப்பை விட அதிக கோயில்களை இடித்தவர் என்ற பெயருடன் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் நரேந்திர மோடி என்று விஸ்வநாத ஆலய தலைமை பூசாரி தெரிவித்துள்ளார். ஞானவாபி மசூதி சர்ச்சை தொடர்பாக விஸ்வநாதர் ஆலய தலைமை பூஜாரி மற்றும் பரம்பரை அறங்காவலரான ராஜேந்திர பிரசாத் திவாரி உடன் நியூஸ்-கிளிக் என்ற இணைய இதழ் நடத்திய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை புணரமைக்கவும் அதன் பிரகாரத்தை விரிவுபடுத்தவும் ரூ. 339 கோடி செலவிலான முதல் கட்ட … Read more

உரிய ஆவணங்கள் இல்லாததால் வேலூர் அருகே 10 கோடி ரூபாய் பறிமுதல்: போலீஸ் விசாரணை

வேலூர்: வேலூர் அருகே காரில் எடுத்துச் செல்லப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற காவலர்கள் அவர்களிடம் சாதாரணமாக விசாரித்தனர். ஆனால் போலீஸாரைக் கண்டதும் … Read more

நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை; நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள், மருமகன் நவீன்குமார் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

இம்பால்: மணிப்பூரில் தெங்னூமால் என்ற இடத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, மேகாலாவிலும் உணரப்பட்டது.

அண்ணா பிறந்த நாள்: மதுரை மத்திய சிறையில் இருந்து 2 ஆம் கட்டமாக 15 கைதிகள் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து 2 ஆம் கட்டமாக 15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்;டனர். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறையில் உள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை காரணமாக , தண்டனையை குறைத்து விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது . இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்து 22 ஆயுள் தண்டனை கைதிகளை … Read more