கோயம்பேடு மார்க்கெட்.! (30.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 30/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 28/24/18 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 32/30 உருளை 34/26/25 சின்ன வெங்காயம் 60/45/40 ஊட்டி கேரட் 100/80/60 பெங்களூர் கேரட் 90/80 பீன்ஸ் 50/40 பீட்ரூட். ஊட்டி /60.50 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 35/30 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 20/18 வரி … Read more

இன்று சானிட்டரி நாப்கின் கேட்பீர்கள்.. நாளை ஆணுறை கேட்பீர்கள்… ஐஏஎஸ் அதிகாரி பேச்சால் சர்ச்சை..!!

பீகார் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ‘அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மகளிர் மற்றும் குழந்தைகளு மேம்பாட்டு நிறுவன இயக்குநர ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரியிடம் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டனர். அதில் ஒரு மாணவி, “அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. ஆனால் எங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை ரூ.20 முதல் 30 ரூபாயில் ஏன் வழங்க முடியவில்லை? … Read more

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செப். 30 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

#PonniyinSelvan: `காதலும் வீரமும் கலந்தவர் வந்தியத்தேவன்’; சொல்கிறார் `கேட்டரிங்' அருள்மொழி வர்மன்!

ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கும் திரைப்படமான `பொன்னியின் செல்வன்’ இன்று (30-9-2022) வெளியாகியிருக்கிறது. கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.. அந்த நாவலில் வரும் பொன்னியின் செல்வன் `அருள்மொழி வர்மன்’ தான், உலகமே வியந்து போற்றும் ராஜராஜசோழன்! சோழ மக்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்தவர்; மிகச்சிறந்த வீரன். 19 வயதிலயே சோழப்பேரரசின் தளபதியாக விளங்கியவர். அருள்மொழி வர்மன், பல தடைகளைத் தாண்டித்தான் … Read more

ஆயுதபூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு

சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிக்க இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் அக்.4, 5-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளன. இதற்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் (செப்.30, அக்.1) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல … Read more

காஷ்மீரில் 2 பேருந்துகளில் குண்டுவெடித்து 2 பேர் காயம்

ஜம்மு: காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூரில் இந்துக்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். அங்கு ராணுவத்தின் வடக்கு பிரிவின் தலைமையகம் செயல்படுகிறது. நகரின் டோமல் சவுக் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஏராளமான தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கு நேற்று முன்தினம் இரவு இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் பேருந்து முற்றிலுமாக உருக்குலைந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை உதம்பூர் பஸ் … Read more

RS mangalam பள்ளி வினாத்தாள் கசிவு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

சென்னை: வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6,7,8-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக தலைமயைாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத்தேர்வு நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினம் … Read more

#PonniyinSelvan: கார்ல பிரசவம், காவிரியோரம்… அப்பாவின் ஆசை!"- `பொன்னியின் செல்வன்' பெயர்க்காரணம்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகியிருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை போன்ற கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, ‘பொன்னியின் செல்வன்’ கதை மாந்தர்களின் பெயர்களைக் கொண்ட சிலரைத் தேடினோம். பொன்னியின் செல்வன் திரைப்படம்… மத்திய ஆட்சிப் பணியின் ஐ.ஐ.எஸ் பிரிவு அதிகாரியாக இருக்கும் பொன்னியின் செல்வனிடம், அவரின் பெயர்க்காரணம் குறித்துப் பேசினோம்… “என் பெற்றோர், திருச்சி மாவட்டத்தைச் … Read more

68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

டெல்லி: 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது. 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில், டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. இதில் விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் நடிகர்களுக்கு விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார். சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் … Read more

ஆட்டோ மொபைல் ஊழியர்களிடம் ரூ.29 லட்சம் வழிபறி: போலீசார் விசாரணை

சென்னை: சேத்துப்பட்டு குருசாமி பாலம் அருகே ஆட்டோ மொபைல்ஸ் நிறுவன ஊழியர்களிடம் ரூ.29 லட்சம் வழிப்பறி செய்துள்ளனர். நசீர்கான் என்பவரின் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் சந்தோஷ் மற்றும் கமலக்கண்ணன் பணியாற்றி வருகின்றனர். நசீர்கான் தனது ஊழியர்களிடம் சேத்துப்பட்டில் உள்ள தனது நண்பர் முகமது சேக்கிடம் ரூ.29 லட்சம் கொடுக்க சொல்லியுள்ளார். ஊழியர்கள் இருவரும் ரூ.29 லட்சத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பொது மர்ம கும்பல் வழி மறித்து கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து சேத்துப்பட்டு … Read more