யோக நரசிம்மராக சிம்ம வாகனத்தில் மலையப்பஸ்வாமி| Dinamalar

திருப்பதி :திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின். 3ம் நாள் காலை யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்பஸ்வாமி சிம்ம வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளினர்.திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன், 3ம் நாளான நேற்று காலை, 8 மணி முதல், 10 மணி வரை ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தார். மாட வீதிகளில் நடந்த வாகனசேவையில் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் பக்தர்களை … Read more

உக்ரைனின் 4 பிராந்தியங்கள்: ரஷ்யாவுடன் இன்று இணைப்பு| Dinamalar

கீவ்,: உக்ரைனில் தன் ராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை இன்று முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான … Read more

பாஜக-வை நிராகரித்த சுப்புலட்சுமி முதல் குமுறும் நயினார் நாகேந்திரன் வரை… கழுகார் அப்டேட்ஸ்!

பதவி விலகிய பா.ஜ.க நிர்வாகி!காலைவாரிய மோடி கபடி லீக்… தமிழ்நாடு முழுவதும் ‘மோடி கபடி லீக்’ போட்டிகள் நடந்துவந்த வேளையில், தமிழக பா.ஜ.க-வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் பாலாஜி தங்கவேல், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகியிருக்கிறார். பாலாஜி தங்கவேல் அந்தப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, ‘உங்க பூசாரித்தனமும் வேண்டாம்… பொங்கச்சோறும் வேணாம்…’ என்று அவர் கட்சியிலிருந்து விலகினாராம். எல்லாவற்றிலும் தன்னுடைய பெயரை முன்னிலைப்படுத்தச் சொல்வது, … Read more

மதுரை அதிமுக பொதுக்கூட்டம் | சிரிப்பு உரை எனச் சொன்ன ஆர்.பி.உதயகுமார் – கோபித்துக் கொண்ட செல்லூர் ராஜூ

மதுரை: ‘‘திமுக ஆட்சியை அகற்ற மதுரையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது’’ என்று அதிமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ‘‘கொங்கு மண்டலத்தில் பறந்த கே.பழனிசாமி கொடி, தற்போது தென்மண்டலத்தில் பறக்க ஆரம்பித்துள்ளது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையாக இபிஎஸ் உள்ளார். மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிற திமுக ஆட்சியை அகற்ற மதுரையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அதற்கு கே.பழனிசாமி தலைமையில் அணி திரள்வோம்’’ … Read more

தமிழ்நாடு வட இந்தியா போல் மாறக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

விருத்தாச்சலத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, விருதாச்சலம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, விருதாச்சலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், தமிழ்நாட்டில் அதிக அளவில் கரும்பை அரவை செய்த, அம்பிகா சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மூடி கடப்பதாகவும், உடனடியாக விவசாயிகளுக்காக … Read more

அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் நடக்கின்றனர்; மனித கழிவை மனிதனே அகற்றினால் கலெக்டர், ஆணையர்கள் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

மதுரை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது, இந்நிலை தொடர்ந்தால் கலெக்டர், மாநகராட்சி ஆணையர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மனிதக் கழிவுகளை அகற்றுவது, பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வது, கழிவுநீரை அகற்றுதல், குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை தூய்மைப் பணியாளர்கள் கைகளால் மேற்கொள்ளும் நிலை உள்ளது. மனிதக் கழிவுகளை … Read more

மதுரைக்கு திடீர் விசிட் அடித்த கேத்ரினா கைஃப்

மும்பை: மதுரையை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூரில் அமைந்துள்ளது `மவுண்ட் வியூ’ பள்ளி. அந்தப் பள்ளியின் தொடக்க நாள் விழா நிகழ்ச்சிக்காகத்தான் கேத்ரினா கைஃப் அங்கு வந்திருந்தார். தொடக்க நாள் விழா நிகழ்ச்சிக்காக அந்தப் பள்ளியின் குழந்தைகள் …

சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைக்க அனுமதி உண்டு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: திருமண ஆனவர், ஆகாதவர் என்று இல்லாமல் அனைத்து பெண்களுக்கும், சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி உண்டு என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. திருமணம் ஆகாத பெண்களும் கருகலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமா கோலி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று … Read more

சென்னை: சாலை ஓரத்தில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மாநகர பேருந்து மோதி உயிரிழப்பு.!

சென்னை கேகே நகரில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாநகர பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த ஜானகிராமன், எம்ஜிஆர் நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்துவரும் ஜானகிராமனுக்கு கல்யாண் என்ற மகனும், கண்மணி என்ற மகளும் இருக்கின்றனர். கல்யாண் தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கண்மணி சென்னை … Read more

வசமாக சிக்கிய விடுதி துப்பரவு பணியாளர்.. மொபைலில் சிக்கிய மாணவிகளின் பகீர் வீடியோக்கள்!

கான்பூரில் மாணவிகளை அவர்களுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்த தனியார் விடுதி துப்புரவாளரை மாணவிகளின் புகாரின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். கான்பூர் துல்சி நகரில் மருத்துவ தேர்வுகளுக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி இயங்கிவருகிறது. இந்த விடுதியை காவல்துறை அதிகாரியான கூடுதல் எஸ்.பி ஒருவர் நடத்திவருகிறார். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவிகள் வந்து இங்கு தங்கி படித்துவருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இன்று, அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளரான ஆண் ஒருவர், ஒரு மாணவியை ரகசியமாக படம் பிடித்துள்ளார். … Read more