’குழந்தையை காண வரும் முன்னாள் கணவரை டீ கொடுத்து உபசரிக்க வேண்டும்’ என்ற உத்தரவு ரத்து!!

குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேனீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவர்–மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருதி, குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும் … Read more

நடனம் ஆடவில்லை எனக்கூறி மாணவர்களை வகுப்புக்குள் வைத்து பூட்டி கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

6ஆம் வகுப்பு மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டி, மரக்குச்சியால் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார் ஜார்க்கண்ட் ஆசிரியர் ஒருவர். இதில் காயமடைந்த 13 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விகாஸ் சிரில் என அறியப்படும் அந்த ஆசிரியரின் சொல்லுக்கு ஏற்ப நடனம் ஆட மறுத்துள்ளனர் அந்த மாணவர்கள். அதனால் ஆசிரியர் அவர்களிடம் கோபத்தைக் காட்டவே அதுகுறித்து பள்ளியின் பிரின்ஸ்பலிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் மாணவர்களுடைய பேச்சை கேட்பதற்கு பதிலாக … Read more

ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டம் நீட்டிப்பு!| Dinamalar

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக துவங்கப்பட்ட, ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ எனப்படும், ஏழைகளுக்கான இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஏழாவது முறையாக டிசம்பர் வரை நீட்டிக்க, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கின் போது, மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த நிலைமையை சமாளிப்பதற்காக, பல்வேறு உதவி திட்டங்களை மத்திய அரசு … Read more

புகாருக்கு ஆளான நடிகருக்கு தற்காலிகத் தடை : போஸ்டரில் படம் நீக்கம்

மலையாள திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த பத்து வருடங்களாக படிப்படியாக முன்னேறி ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ள இவர், கதாநாயகனாக நடித்துள்ள சட்டம்பி என்கிற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அதன் தொகுப்பாளினி கேட்ட கேள்விகளால் கோபமடைந்து அவரை அநாகரிகமான வார்த்தைகளால் ஸ்ரீநாத் பாஷி திட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து தொகுப்பாளினியும் சம்பந்தப்பட்ட சேனல் நிறுவனமும் போலீசில் … Read more

சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 17 பேர் பலி..!!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் நகரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம், இந்த உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டரை மணி … Read more

பாலியல் தொழிலாளர் நிலையை சித்திரிக்கும் துர்க்கை பொம்மை; கவனம் ஈர்த்த கொல்கத்தா நவராத்திரி!

பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்திரிக்கும், சிலிக்கானால் செய்யப்பட்ட துர்க்கை பொம்மை, கொல்கத்தா துர்க்கை பூஜை விழாவில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் துர்கை பூஜையை முன்னிட்டு, கொல்கத்தாவில் புதுப்புது வடிவமைப்புகளுடனும், மையக்கருப்பொருள்களுடனும் பந்தல்கள் அமைக்கப்படும். மதம் முதல் வரலாறு, காலநிலை மாற்றம் என்று சமூகப் பிரச்னைகளை எதிரொலிக்கும் விதமாகவும், வெளிக்காட்டும் விதமாகவும் பந்தல்கள் அமைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு, பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்திரிக்கும் விதமாக, … Read more

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: இடைக்கால தடையை நீக்க கோரி தமிழக அரசு மனு

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக … Read more

பிஹார் | சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியிடம் கடுமையாக பேசிய ஆட்சியர்: வலுக்கும் கண்டனம்

பாட்னா: பிஹாரில் அரசிடம் சானிட்டரி நாப்கின் கேட்ட பள்ளி மாணவியிடம் கடுமையாக பேசிய மாவட்ட ஆட்சியருக்கு கண்டனங்கள் வலுத்ததைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். பிஹாரின் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில், மாவட்ட ஆட்சியரான ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். அவரிடம் பள்ளி மாணவி ஒருவர், “அரசு எங்களுக்கு குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத், “அரசு சார்பில் ஏற்கெனவே சீருடைகள், உதவித் … Read more

ஆண்டுதோறும் அரசுக்கு 59.82 லட்சம் ரூபாய் இழப்பு… நீதிபதியின் கடிதத்தில் பகீர் தகவல்!

உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பி உள்ள அந்த கடிதத்தில், ‘இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் செல்வராஜ் என்பவர் தமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் பல ஆண்டுகளாக தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளார். தொழில் வழி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படாத நிலையில் சம்பள கணக்கு … Read more