அக்டோபர் மாதத்தில் மட்டும் 9 நாட்களுக்கு வங்கி விடுமுறை!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த ஆண்டு துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. இப்போது நடந்து கொண்டிருக்கும் அக்டோபர் மாதத்தில் மீதமிருக்கும் 20 நாட்களில் சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

அக்டோபர் 1, 2022- சனி – வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (கேங்டாக்)

அக்டோபர் 2, 2022- ஞாயிறு – காந்தி ஜெயந்தி

அக்டோபர் 3, 2022- திங்கள் – துர்கா பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி)

அக்டோபர் 4, 2022- செவ்வாய் – ஸ்ரீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை/தசரா/ஆயுத பூஜை/ஜன்மோத்சவ் (அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், குவஹாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்)

அக்டோபர் 5, 2022- புதன் – ஸ்ரீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை/தசரா/ஜன்மோத்சவ்

அக்டோபர் 6, 2022- வியாழன் – துர்கா பூஜை (காங்டாக்)

அக்டோபர் 7, 2022- வெள்ளி – துர்கா பூஜை (காங்டாக்)

அக்டோபர் 8, 2022- 2வது சனிக்கிழமை – மிலாத்-இ-ஷெரிப்/ஈத்-இ-மிலாத்-உல்-நபி (முஹம்மது நபி பிறந்த நாள்) (போபால், ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்)

அக்டோபர் 9, 2022- ஞாயிறு

அக்டோபர் 13, 2022- வியாழன் – கர்வா சௌத் (சிம்லா)

அக்டோபர் 14, 2022- வெள்ளி – ஈத்-இ-மிலாத்-உல்-நபி (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)

அக்டோபர் 16, 2022- ஞாயிறு

அக்டோபர் 18, 2022- செவ்வாய் – கதி பிஹு (கவுகாத்தி)

அக்டோபர் 22, 2022- 4வது சனிக்கிழமை

அக்டோபர் 23, 2022- ஞாயிறு

அக்டோபர் 24, 2022- திங்கள் – காளி பூஜை/தீபாவளி

அக்டோபர் 25, 2022- செவ்வாய் – லக்ஷ்மி பூஜை/தீபாவளி/கோவர்தன் பூஜை (காங்டாக், ஹைதராபாத், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர்)

அக்டோபர் 26, 2022- புதன் – கோவர்தன் பூஜை/பாய் தூஜ்/தீபாவளி/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம் (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர்)

அக்டோபர் 27, 2022- வியாழன் – பாய் தூஜ்/லட்சுமி பூஜை/தீபாவளி (காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோ)

அக்டோபர் 30, 2022- ஞாயிறு

அக்டோபர் 31, 2022- திங்கள் – சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்/சூர்ய பஷ்டி தலா சாத்/சத் பூஜை (அகமதாபாத், பாட்னா மற்றும் ராஞ்சி)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.