வெடிகுண்டு தாக்குதல் 18 சிரிய வீரர்கள் பலி| Dinamalar

பெய்ரூட் : டமாஸ்கஸ் புறநகரில் பஸ்சில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிர்இழந்தனர். காயம் அடைந்த 27 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்காசிய நாடான சிரியாவின் டமாஸ்கஸ்நகரம் அருகே ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் அதே இடத்தில் உயிர்இழந்தனர். காயம் அடைந்த 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.