ஹிந்துக்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் புனித கயிறு அணிவது வழக்கம். தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து இந்தக் கயிற்றை
வலது கை மணிக்கட்டில் கட்டிக் கொள்வர். இது எதிரிகளிடமிருந்து தங்களை காப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக், கையில் சிவப்பு கலர் புனித கயிறு அணிந்துள்ளார். மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த போதும், பிரதமர் இல்ல வாசலில் நின்று பொதுமக்களை பார்த்து கை அசைத்த போதும் அவர் அணிந்துள்ள சிவப்பு கயிறு, பலரின் கவனத்தை கவர்ந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement