சிவகங்கை || முறையாக செயலாற்றாத அதிகாரி.! ஆதாரத்துடன் கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்.!

சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சிமன்ற கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய கவுன்சிலர் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதேபோல், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன், தெருக்களில் பதிக்கப்படும் ஃபேவர் பிளாக் கற்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதில்லை என்றுக் கூறி ஆதாரத்திற்காக கற்களை கொண்டு வந்தார். 

கூட்டத்தில் நடந்த வாக்குவாதத்தில், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி, இனி முறையாக செயலாற்றுவதாக உறுதியளித்தார். இதற்கிடையே குடிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, திமுக, அதிமுக மற்றும் அமமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.