கர்ப்பமாக்கிய காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: தடுத்து நிறுத்திய காதலி..!

திருமங்கலத்தில், தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கிய காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை காதலி தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மூத்த மகள் நாகபிரியா(30). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நாகபிரியாவும் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமி(32) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சின்னசாமி பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

சின்னசாமி நாகபிரியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் நாகபிரியா கர்ப்பமானார். இதற்கிடையே, சின்னசாமிக்கு அவரது பெற்றோர், விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகபிரியா, தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் சின்னசாமிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு இன்று காலை வந்தார். சின்னசாமி தன்னை காதலித்து கர்ப்பமாகிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்தார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணமக்கள் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நாகபிரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் பேசி திருமணத்தை நிறுத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.