“பாகிஸ்தானுக்கு சரியான கேப்டன் இல்லை”- பாபர் அசாமை விமர்சித்த சோயப் அக்தர்!

8-வது டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்தவகையில் நேற்று நடந்த போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தையும் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியையும் எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 56 ரன்களை எடுத்து நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. இதனை அடுத்து 131 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சொற்ப ரன்களில் வெளியேற, ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சி சரியில்லை என்று விமர்சித்துள்ளார். சோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில், “உங்களுக்குப் புரிந்துகொள்வதற்கு ஏன் கடினமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாம் டாப் மற்றும் மிடில் ஆர்டர் மூலம் பெரிய வெற்றியைப் பெற முடியும். ஆனால் பாகிஸ்தானுக்கு சரியான கேப்டன் இல்லை. பாகிஸ்தான் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஷஹீன் ஷா அப்ரிடியின் உடற்தகுதியில் குறைபாடு. கேப்டன்சியில் குறைபாடு மற்றும் நிர்வாகத்திலும் பெரிய குறைபாடுகள் உள்ளது. நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம், ஆனால் நீங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாடுகிறீர்கள்?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.