பராக் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் நீக்கம்| Dinamalar

சான் பிரான்ஸிஸ்கோ: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்திருந்தார். பின்னர் தன் முடிவில் இருந்து அவர் பின்வாங்கியதை அடுத்து, ஒப்பந்தத்தை தட்டிக்கழிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்.,28க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. இந்த நிலையில் நேற்று (அக்.,27) ஒப்பந்தம் முடிந்து டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார் எலான் மஸ்க். இதனையடுத்து ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
டுவிட்டரின் உரிமையாளரானது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், “இந்நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை. மனிதகுலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமான டுவிட்டரை வாங்கினேன்” என்று மஸ்க் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.