கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து!!

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் பாலம் திடீரென அறுந்ததால் ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர். விபத்து நடைபெற்ற போது பாலத்தில் சுமார் 500 பேர் இருந்ததாகவும் ஆற்றுக்குள் 400-க்கும் இருக்கும் மேற்பட்டோர் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அனைவரும் சத்பூஜைக்காக சென்ற போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஆற்றுக்குள் விழுந்ததில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடாக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற இந்த பாலம் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் திறந்து வைக்கப்பட்டது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.