கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திருடிய நபர் கைது!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே புத்தனன்குடி என்ற பகுதியில் உள்ள ஸ்ரீகுமரவிலாசம் கோயிலில் தான் திருட்டு நடந்துள்ளது. ராஜேஷ் என்ற நபர் கோயிலுக்குள் திருட நுழைந்துள்ளார்.

அப்போது அவர் பய பக்தியுடன் கடவுளை கும்பிட்டு பிரார்த்தனை செய்தார். பின்னர் கோயில் கருவறைக்குள் வைத்திருந்த தங்க நகைகள், திருவாபரணம், தங்க கிரீடம் தங்கக்கூடு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றார்.

இந்த கோயில் கொள்ளை சம்பவம் குறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்படி சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் திருட்டில் ஈடுபட்ட ராஜேஷ் என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நபரிடம் இருந்து தங்க நகை உட்பட பொருட்களை மீட்டனர். கொள்ளை அரங்கேறி சில மணி நேரத்தில் அவர் சிக்கிக் கொண்டார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.