பெட்டிக்கடையில் நடக்கும் மது விற்பனையை அம்பலப்படுத்திய இளைஞர்

திருவாரூர் மாவட்டம் தட்டாங்கோயிலில் பெட்டிக்கடையில் நடக்கும் மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்கோவனூர், திருராமேஸ்வரம் ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோட்டூர் காவல் ஆய்வாளருக்கு புகார் அளிக்கப்பட்டது.

எனினும், நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் மது விற்பனையை ரகசியமாக எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது செயப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.