'இந்த கேள்வியை உங்க அமைச்சரிடம் கேளுங்கள்' – பாக்., நிருபரிடம் சீறிய அமைச்சர் ஜெய்சங்கர்!

”இனியாவது திருந்தி ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சியுங்கள்” என்று பாகிஸ்தானை சரமாரியாக விளாசித் தள்ளியுள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் நேற்று இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைமையில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் ஐ.நா.சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “இந்த உலகம் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கிறது. மேலும் தீவிரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொண்டுள்ளது.

image
இரண்டரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்த நம் அனைவருக்கும் சற்று மூளை மந்தநிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் நம் மூளை பயங்கரவாதத்தை தூண்டுபவர்களை மறக்கவில்லை. அதனால் தீவிரவாதத்தை துண்டுபவர்கள் அதனைத் தொடரும் முன் இதனை நன்றாகப் புரிந்து கொள்ளட்டும்.

2011ல் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளின்டன், “நீங்கள் உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் விஷப் பாம்புகளை வைத்துக் கொண்டு அது உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அந்த பாம்பு அதை அங்கே விட்டவர்களையும் கடிக்கும். பாகிஸ்தான் இதுபோன்ற அறிவுரைகளை ஏற்காது என்று தெரியும்” என்று பாகிஸ்தான் பயணத்தின் போது சொல்லியிருந்ததை நான் இங்கு நினைவு கூருகிறேன்” என்றார்.

image
அப்போது பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஒருவர், “இன்னும் எத்தனை காலம் தான் பயங்கரவாதம்  பாகிஸ்தானில் இருந்து உருவாகிறது என்று தெற்காசியா பார்க்கப்போகிறது ” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர் “இந்தக் கேள்வியை நீங்கள் தவறாக என்னிடம் கேட்டு விட்டீர்கள். இதனை நீங்கள் பாகிஸ்தான் அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். அப்போது தான் அவர்கள் இன்னும் எத்தனை காலம்தான் தாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்க முற்பட்டுள்ளார்கள் என்ற சரியான பதில் சொல்வார்கள் ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சர்வதேச சமூகத்தை முட்டாள் என்று நினைக்க வேண்டாம். இச்சமூகம் எதையும் மறக்கக் கூடியது அல்ல. இது நிச்சயமாக பயங்கரவாதத்தைத் தூண்டும் தேசங்களை மன்னிக்காது. இனியாவது திருந்தி ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சியுங்கள்” என்றார்.

தவற விடாதீர்: `ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்ககூடாது’ – மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.