இந்தியா 3வது முறை சாம்பியன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு : பார்வையற்றோர் டி20 உலககோப்பையில் இந்தியா 3வது முறை சாம்பியன் கோப்பை கைப்பற்றியது.

பார்வையற்றவர்களுக்கான டி20 உலககோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும், வங்கதேச அணியும் மோதியது.பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3வது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடியது. இந்திய அணி ஏற்கனவே 2012 மற்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையிலும் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய பார்வையற்ற வீரர்களுக்கான அணி, 20 ஓவர் முடிவில் 277 ரன்கள் சேர்த்தது.சுனில் ரமேஷ் 63 பந்தில் 136 ரன்களும், அஜய் குமார் 50 பந்தில் 100 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.