வருத்தப்பட்ட வாலிபர் சங்க தலைவர் ரீல்ஸ் கஞ்சாபுள்ள கைது..! கத்தி எடுத்தவருக்கு புத்தி வந்ததாம்

கிருஷ்ணகிரியில் ஆயுதங்களுடனும், போலீசாரை மிரட்டுவதைப் போலவும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட புள்ளீங்கோ இளைஞரை போலீசார் கைது செய்தனர்.கஞ்சா போதையில் கத்தியுடன் கெத்தாக ரீல்ஸ் செய்த கைபுள்ள கையெடுத்து கும்பிட்டு வருத்தப்பட்ட  சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கிருஷ்ணகிரி, பழையபேட்டை பகுதியில் அதிகளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் கஞ்சா சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பழைய பேட்டை பேருந்து நிலையம் அருகே கஞ்சா புகைத்த படி புள்ளீங்கோ இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார்

அந்த கஞ்சா குடிக்கி இளைஞரை பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர் பழையபேட்டை கொத்தப்பேட்டா காலனியை சேர்ந்த அசோக் என்பதும் அவர் மீது ஏற்கனவே மூன்று அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

செல்போனை ஆய்வு செய்த போது, அசோக், தன்னை ஒரு கேங்ஸ்டர் போல காட்டிக் கொண் டு லெக்கின் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு ரீல்ஸ் செய்து வந்தது தெரியவந்தது

கஞ்சா அடிப்பது போன்றும், கஞ்சா செடியின் அருகில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதும், மேலும் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் ரீல்ஸ் செய்திருப்பதும் கண்டுபிடித்தனர்.

இதன் அடிப்படையில் அசோக் மீது வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்தனர். எங்கே தப்பி ஓடியதால் கை கால் முறிந்ததாக போலீசார் கூறிவிடுவார்களோ என்று அஞ்சி ரீல்ஸ் என்ற பெயரில் தான் செய்த அலும்புகளுக்கு கையெடுத்துக் கும்பிட்டு வருத்தம் தெரிவித்த கைப்புள்ள அசோக், இனி தான் கஞ்சா அடிக்க மாட்டேன், அடிதடியில் ஈடுபட மாட்டேன், போலீசாரை தரக்குறைவாக பேசமாட்டேன், ஒழுக்கத்துடன் நடந்து கொள்வேன் என போலீசாரிடம் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டார்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.