மதுரை: தமிழ் மொழியை வளர்க்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது. மதுரை உலக தமிழ்ச் சங்கத்திற்கு தேவையான அடிப்படை வசதி, தமிழ் நூல்கள் அதிக அளவில் வைக்க உத்தரவிட கோரிய வழக்கில், அதிக நிதி ஒதுக்கி, சங்க கால தமிழ் இலக்கியம், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்து பிரபலப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.