ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அலர்ட்..!

மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்ற உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என, மத்திய சுகாதாரத்துறை மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அதே நிலை உருவாகக்கூடாது என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மனோகர் அக்னானி, மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஆக்ஸிஜன் உருவாகும் ஆலைகள் முழுமையாகச் செயல்படுவதையும், அவற்றைச் சரிபார்க்க வழக்கமான மாதிரி பயிற்சிகள் நடத்தப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும்.

சுவாச கருவிகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்ற உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் தொடர்பான பிரச்னைகள், சவால்களை உடனுக்குடன் தீர்க்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.