சென்னை விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபசாரம் நடைபெறுவதாக விருகம்பாக்கத்தில் உள்ள காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, தலைமை காவலர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த குடியிருப்பில் உள்ள அறையில் வாடிக்கையாளர்கள் அழகிகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவன அலுவலகம் என்கிற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபசாரம் மேற்கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாண் குமார் திருவொற்றியூரை சேர்ந்த மேரி உள்ளிட்ட இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று இளம்பெண்களையும் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.