மின்சார வாகனங்கள் குறித்து  ஓராண்டு டிப்ளமா படிப்பு| One year Diploma course in Electric Vehicles

பெங்களூரு ‘மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா’ நிறுவனமும், அதன் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு’ அமைப்பும் இணைந்து, பெங்களூருவில் உள்ள ‘ஆர்.வி.தொழில்நுட்பக் கல்லூரி’யில், மின்சார வாகனங்கள் பற்றிய ஓராண்டு ‘டிப்ளமா’ படிப்பை துவக்கியுள்ளது.

மேலும், மாணவர்களின் திறனை மேம்படுத்த, அதிநவீன மின்சார வாகன ஆய்வகத்தையும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி மானு சாலே திறந்து வைத்தார்.

இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மானு சாலே கூறியதாவது:

வாகனத் துறை, தற்போது மின்சார வாகனங்களுக்கு மாறி வருகிறது. தொழில்நுட்பம், தயாரிப்பு முறைகள் மற்றும் விற்பனை ஆகியவற்றின் மாற்றத்தைப் பொறுத்தே, இத்துறை உருமாறும்.

அதனால், எதிர்கால வேலை வாய்ப்பு மற்றும் மின்சார வாகன துறைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், நடைமுறைக்கு தேவையான ஆய்வகத்தை உருவாக்கியுள்ளோம்.

அத்துடன் உலகத்தரத்திற்கு இணையான ‘கட்டிங் எட்ஜ்’ தொழில்நுட்பங்கள் மற்றும் ‘சிமுலேஷன் டைனமிக்ஸ்’ ஆகியவற்றிலும் மாணவர்களை தயார்படுத்த இந்த முயற்சி உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.