ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் லீக்: 44 பேர் கைது

ஜெய்பூர்:  ராஜஸ்தானில் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்காக நடந்த பொது அறிவுத் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதால் உடனடியாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்துக்கான பொது அறிவுத் தேர்வு நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பொதுஅறிவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வௌியானது. இதையடுத்து பொதுஅறிவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார்.

மாணவர்கள் யாருக்கும் அநீதி இழைக்கப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, கேள்வித்தாள் கசிவு விவாகரத்தில் தொடர்புடையதாக 37 மாணவர்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள போலீசார், கேள்வித் தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட ஜோத்பூரை சேர்ந்த சுரேஷ் விஷ்னோய் உட்பட 7 பேரும், உதய்பூரை சேர்ந்த 37 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.