கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்| Moscow-Goa Flight Diverted To Uzbekistan After Bomb Threat: Report

பனாஜி: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவா வந்த பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், அந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.

மாஸ்கோவில் இருந்து, 240 பயணிகளுடன் கிளம்பிய ‘அஜூர் ஏர்’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று(ஜன.,21) அதிகாலை 4:30 மணிக்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்தில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால், நள்ளிரவு12:30 மணியளவில், அந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக, தபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு இமெயில் வந்தது. அந்த நேரத்தில் இந்திய வான் பரப்பிற்குள் நுழைவதற்கு முன்னரே, உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது.

கடந்த 2 வாரத்திற்கு முன்னர், மாஸ்கோவில் இருந்த கோவா வந்த விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம், குஜராத்தின் ஜாம்நகரில் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.