2027ல் இந்தியா வல்லரசாகும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை..!!

திருநெல்வேலி மாநகரில் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பாக வையத் தலைமை கொள்ளும் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “2047 இந்தியா உலகிற்கே வழிகாட்டியாகவும் வல்லரசாகவும் மாறும். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கிய ஆண்டாக இருக்கும். தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கை.

சர்வதேச அளவில் போட்டி போடவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனையை சொல்லி முடிக்கவே 8 ஆண்டுகள் ஆகும். வரலாற்றில் முதன்முறையாக பாரதப் பிரதமர் மோடி தலைமையில் ஜி 20 மாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது.

உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி பார்க்கின்றன. உலகில் இந்தியாவில் மட்டும் 80 ஆயிரம் புத்தக தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை கொண்டு வந்தோம். தேசிய கல்விக் கொள்கையானது அனைத்து தரப்பினரிடம் கலந்து ஆலோசித்த பின்னர் தான் தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது” என பேசி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.