முதல் போட்டியில் களமிறங்கிய ரொனால்டோ…அபார வெற்றியை பதிவு செய்த அல் நாசர்


சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அல்-எட்டிஃபாக் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதல் போட்டி

பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிளவு பிறகு, தனது 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்துடன் சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்புடன் இணைந்தார்.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்குச் குடும்பத்துடன் சென்ற ரொனால்டோ, தன்னுடைய புதிய அணியுடன் பயிற்சியை தொடங்கியும், ஃபிபா கால்பந்து சம்மேளனம் விதித்த தடையால் சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் களமிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

முதல் போட்டியில் களமிறங்கிய ரொனால்டோ…அபார வெற்றியை பதிவு செய்த அல் நாசர் | Al Nassr Won Ettifaq Ronaldo Debut In Saudi League

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-எட்டிஃபாக் அணிக்கு எதிரான போட்டியில் தனது புதிய கிளப்பான அல் நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.

அத்துடன் இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசர் அணியின் கேப்டனாகவும் களமிறக்கப்பட்டார்.

முதல் போட்டியில் களமிறங்கிய ரொனால்டோ…அபார வெற்றியை பதிவு செய்த அல் நாசர் | Al Nassr Won Ettifaq Ronaldo Debut In Saudi League

அல் நாசர் வெற்றி

ரொனால்டோ களமிறங்கிய முதல் போட்டியிலேயே அல் நாசர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அல்-எட்டிஃபாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் 31வது நிமிடத்தில் பிரேசிலின் முன்கள வீரர் ஆண்டர்சன் தலிஸ்கா முதல் கோல் அடித்து அல் நாசர் அணியை முன்னிலை படுத்தினார்.

ஆட்டத்தின் இறுதி நொடி வரை அல்-எட்டிஃபாக் அணியால் கோல் அடிக்க முடியாததால் ஆட்ட நேர முடிவில் அல் நாசர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ரொனால்டோ தன்னுடைய புதிய கிளப்பிற்காக கோல் ஏதும் இந்த போட்டியில் அடிக்கவில்லை என்றாலும், ஆட்டம் முழுவதும் மிகவும் கலகலப்பாக காணப்பட்டார்.

அல் நாசர் அணியின் இந்த வெற்றியின் மூலம் சவுதி புரோ லீக்கில் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.  





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.