பிரதமர் மோடி புகழ்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளை பார்க்க குவிந்த மக்கள்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் வானொலி மூலம் மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டி மக்களிடையே உரை நிகழ்த்தி வருகிறார். அதன்படி புத்தாண்டின் முதல் மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதாகவும், நமது நாடு இந்த இரண்டாயிரத்தின் தாய் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம் என குறிப்பிட்டார்.

ஜனநாயகம் என்பதே நமது நரம்புகளிலும் கலாச்சாரத்திலும் இருப்பதாக தெரிவித்த பிரதமர் பல நூற்றாண்டுகளாக அவை நமது பணியில் ஒரு அங்கமாக இருப்பதாகவும் இயற்கையாகவே நாம் ஒரு ஜனநாயக சமூகம் எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் உள்ள உத்திரமேரூர் எனும் மிகச் சிறிய கிராமம் என்றாலும் புகழ்பெற்ற கிராமம் என தெரிவித்த பிரதமர் இங்குள்ள ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சர்யப்படுத்துவதாக குறிப்பிட்டார். குடவோலை எனும் தேர்தல் மூலம் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பது, கிராம சபை கூட்டங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும், அதன் உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், என்பது உள்ளிட்டவை மிக விரிவாக இங்கு குறிப்பிடப்பட்டு கல்வெட்டு இருப்பதாக தெரிவித்த பிரதமர். இந்த கல்வெட்டுகள் நமது நாட்டின் மினி அரசியல் சாசனமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.

உத்திரமேரூர் குறித்து ஏற்கனவே நாடு முழுவதும் அறிந்துள்ள நிலையில் தற்போது பிரதமர் குறிப்பிட்டு பேசியுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி உத்திரமேரூர் குறித்து மனதின் குரல் மன் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உத்திரமேரூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கல்வெட்டுக் கோவிலை காண திரண்டு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இதன் மூலம் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலில் குடவோலை தேர்தல் முறை குறித்து உள்ள கல்வெட்டுகளை,வரலாற்று ஆர்வலர்களும், பள்ளி மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளனர். நாட்டின் கடை கோடியில் உள்ள தமிழகத்தின் உத்திரமேரூர் குறித்தும், குட ஓலை தேர்தல் குறித்த கல்வெட்டுகள் குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என உத்திரமேரூர் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.