Nayanthara: நயன்தாராவுக்கே இந்த நிலைமைனா, பிற நடிகைகள் என்ன செய்வாங்க பாவம்

நயன்தாரா படங்களில் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்று பேசப்பட்ட நிலையில் அவர் எதை நிறுத்துகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

நயன்தாராஎடுத்த எடுப்பிலேயே சுப்ரீம் ஸ்டார், சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்து, யாருய்யா இந்த பொண்ணு என தமிழ் ரசிகர்களை வியக்க வைத்தவர் நயன்தாரா. படிப்படியாக முன்னேறி லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். ஹீரோயினை மையமாக கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் நயன்தாரா. ஆனால் அத்தகைய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போவது அதிகம் நடந்து வருகிறது.
முடிவுதொடர்ந்து ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வந்தார் நயன்தாரா. ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதையடுத்தே இனி ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் வேண்டாம், பிற ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவிடலாம் என நயன்தாரா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகைகள்நயன்தாராவை பார்த்து தான் பிற ஹீரோயின்களும் ஹீரோயினை மையமாக வைத்து வரும் படங்களை தேர்வு செய்யத் துவங்கினார்கள். இந்நிலையில் நயன்தாராவே இப்படி ஒரு முடிவு செய்தால் மற்றவர்களும் பாவம் தான். அவர்களும் பழையபடி ஹீரோக்களுடன் டூயட் பாடுவதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் போன்று. ஆனால் நயன்தாரா பற்றிய விஷயத்தை முழுவதுமாக நம்ப முடியாது என ரசகிர்கள் தெரிவித்துள்ளனர்.
வதந்திநயன்தாராவுக்கும், வதந்திக்கும் அப்படி ஒரு பொருத்தம். அவரின் கெரியர் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது வதந்தி பரவுகிறது. அதனால் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இனி நடிப்பது இல்லை என நயன்தாரா முடிவு எடுத்திருப்பதாக வெளியான தகவலும் வதந்தியாக இருக்கலாம். நயன்தாராவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை அவரை பற்றிய எந்த தகவலையும் நம்ப முடியாது என்கிறார்கள் ரசிகர்கள்.
ஜவான்கெரியரை பொறுத்தவரை அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இது தவிர்த்து ஜெயம் ரவி ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித் குமாரை வைத்து தன் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏ.கே. 62 படத்திலும் ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு த்ரிஷாவின் பெயர் அடிபட்டது. இந்நிலையில் ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். அவருக்கு பதில் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறாராம்.
ஏ.கே. 62AK62, Vignesh Shivan: அஜித், லைகா செய்தது அநியாயம், விக்கிக்கு நியாயம் வேண்டும்: ரசிகர்கள்அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை லைகா நிறுவனம் நீக்கியது அநியாயம் ஆகும். அவருக்கு நியாயம் வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். முன்னதாக லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.