"அந்தச் சிறுவனுக்கு எவ்ளோ அசை இருக்கோ அதே அளவு எனக்கும் இருக்கு" – சின்ன தமிழாவை பாராட்டிய மம்மூட்டி

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்வு ஒன்றில், கென் கருணாஸின் ‘யூத்’ படத்தில் நடித்த சின்னத் தமிழாவைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Youth Movie
Youth Movie

இந்தக் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘யூத்’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் சின்னத் தமிழா, தனக்குத் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோது சந்தித்த அவமானங்கள் மற்றும் தனது தந்தை தன்னைப் பற்றித் தவறாக நினைத்தது குறித்துக் கண்கலங்கிப் பேசியிருந்தார்.

இது குறித்து மம்மூட்டி ‘பேட்ரியாட்’ (Patriot) படத்தின் செய்தியாளர் சந்திப்பில், “இன்று நான் ‘யூத்’ படத்தின் வெற்றி விழா வீடியோவைப் பார்த்தேன்.

அதில் அந்தச் சிறுவன் (சின்னத் தமிழா) பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பலரும் நினைத்த நிலையில், இன்று அவர் அடைந்திருக்கும் இடம் பெரியது.

நடிகர் மம்மூட்டி
மம்மூட்டி

நாங்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்த பிறகுதான் நடிப்பைக் கற்றுக்கொண்டோம். ஆனால் அந்தச் சிறுவனுக்கு நடிப்பின் மீதும், சினிமாவின் மீதும் இருக்கும் அந்த ஆசை மற்றும் தேடல் இப்போதும் எனக்குள் இருக்கிறது.

அவனுக்கு எந்தளவு சினிமா ஆசை இருக்கிறதோ, அதே அளவு ஆசை எனக்கும் இருக்கிறது” எனப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.